உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வருக்கு குண்டர்கள் தேவையா? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்

முதல்வருக்கு குண்டர்கள் தேவையா? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டில்லி முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது.டில்லி ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது, வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம், அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bwkk29x0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 01) நீதிபதிகள் சூர்ய காந்த், தீபன்கர் தட்டா மற்றும் உஜால் புயான் ஆகியார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர். முதல்வரின் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? முதல்வர் அலுவலகத்திற்கு குண்டர்கள் தேவைப்படுகிறார்களா? தாக்குவதை நிறுத்தச் சொல்லி மாலிவால் கூறியும், நீங்கள் தொடர்ந்து அடித்துள்ளீர்கள். என்ன நினைத்து இப்படி செய்தீர்கள்? அதிகாரம் உங்களிடம் இருப்பதாக தலைக்கனமா? நீங்கள் முன்னாள் செயலாளர் தான். பாதிக்கப்பட்ட பெண் அங்கு இருப்பதற்கு உரிமை இல்லை எனில், உங்களுக்கும் அங்கு இருப்பதற்கான உரிமை இல்லை, என்று கோபமாகக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ravi Chandran
ஆக 02, 2024 13:47

கெஜ்ரிவால்.. தனியார் மருத்துவமனைகளில் கட்டணவிபர பலகை வைக்க வேண்டும் என்றார்.. மக்களின் எளிய முதல்வராக அறியபட்டார.ஆதலால் சிறையில்...அஜீத் பவார்.. விஜய பாஸ்கர்..வேலுமனியை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 01, 2024 20:41

40000 கோடி விற்றுமுதல் காண்பிக்கும் டாஸ்மாக் பல ஆண்டுகளாகவே நஷ்டக் கணக்கு காட்டுகிறது. இதை நீதிபதிகள் கேள்வி கேட்க மாட்டீர்களா?


C.SRIRAM
ஆக 01, 2024 19:46

அப்படியே ஓரு விசாரணை கைதி எப்படி முதல்வராக தொடரமுடியும் ?. என்றும் நீதி ? மன்றம் விசாரணை செய்யலாமே ?. ஒரு அரசு ஊழியர் மீது போலீஸ் விசாரணை என்றாலே சஸ்பெண்ட் செய்து விடுவார் . சட்டம் ஆளுக்கு ஆள் மாறுமோ ?.


Swaminathan L
ஆக 01, 2024 19:43

படித்த பாமரர்களை மூளைச்சலவை செய்து ஆட்சிக்கு வந்து, மோசடி, ஊழல் என்று சிக்கிய கட்சி இது. குண்டர்கள் உதவியாளர், அதுவும் வீட்டிலும் உதவி செய்பவர்கள் என்றால் அது வேறு என்ன மாதிரியான உதவிகளாக இருக்கும்?


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 19:30

ஒருவேளை உச்சம் என்னைத்தான் மறைமுகமா கேள்வி கேட்குதோ புலிகேசி மன்னன் குழப்பத்தில் ...


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 19:29

அரவிந்த் கெஜ்ரிவாலின் குரு அண்ணா ஹசாரே ........ கட்டுமரத்தின் குரு அண்ணாவும் ஈவேராவும் ..... குருவாக இருந்தவர்களே பொறுப்பேற்க வேண்டும் ......


konanki
ஆக 01, 2024 19:23

பாரதத்தின் அவமான சின்னம் அரவிந்த் கெஜ்ரிவால்


R. THIAGARAJAN
ஆக 01, 2024 16:50

அரசியலுக்கு அங்கீகாரமே குற்றம் அதன் எண்ணிக்கை தான் இது ஊற் ஆரிய்ந்த உண்மை


Nandakumar Naidu.
ஆக 01, 2024 16:46

கேஜ்ரின்னுதின் ஜெயிலிலும் இருக்கிறார், முதல்வராகவும் நீடிக்கிறார். இந்த மாதிரி ஒரு கேவலமான நடைமுறை பாரதத்தில் தான் நடக்கும். இது உச்ச நீதிமன்றத்தின் கண்களுக்கு புலப்படவில்லையா? தாமாக முன்வந்து பதவி நீக்கம் செய்யலாமே.


இராம தாசன்
ஆக 01, 2024 20:28

இங்கே தமிழக்த்தில் ஒருவர் ஒரு வருடம் அமைச்சராக இருந்தார்.. அப்போதும் யாரும் கவலை படவில்லை


Mohan
ஆக 01, 2024 16:31

ஊழல் முதல்வர், மதுபான வரி வருமானத்தை கிரிமினல்தனமாக குறைத்து இடது வலதாக மாற்றி விற்பவர் வருமானத்தை அதிகப்படுத்தி மாநில வருவாய்குறைந்து கஜானா காலியாக செய்த பம்மாத்து வேலையை நிரூபிக்கவா வேண்டும் ??? உடனே அந்த முதல்வரை தகுதி நீக்கமும் ஆயுட்கால தடையும் செய்து சிறையில் நீண்டகாலம் ஒளித்து வைக்க ஏன் தயக்கம் ??? இந்த நபர்கெஜ்ரி..ல் ஐ.ஐ.டி.யில் படிக்கும் போது கல்லூரி மாணவி கற்பழிப்பு புகாருக்கு ஆளானவர் என ஒரு செய்தி உலா வருகிறது. நீதிமன்றம் அதையும் கவனிக்கலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி