உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க பெண்களை இழிவுபடுத்த வேண்டாம்: மம்தா எச்சரிக்கை

மேற்கு வங்க பெண்களை இழிவுபடுத்த வேண்டாம்: மம்தா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ''மேற்கு வங்க மாநில பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் என பா.ஜ.,வை எச்சரிக்கிறேன்'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சந்தேஷ்காலி சம்பவத்தை திட்டமிட்டு நடத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது என்று நான் நீண்ட காலமாக கூறி வந்தேன். அதன்படி, சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்ற தலைப்பில் நான் வெளியிட்ட வீடியோ அங்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளது.

இழிவு செய்யாதீர்கள்!

மேற்கு வங்க மாநில பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் என பா.ஜ.,வை எச்சரிக்கிறேன். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடப்பதாக பொய் பேசுவதற்காக சிலருக்கு பா.ஜ., பணம் கொடுத்து உள்ளது. ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழந்தால், பணத்தால் அதை மீட்க முடியாது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் மக்கள் பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

s. viswanathan
மே 06, 2024 19:34

பணம் பணம் அதை தவறான வழியில் சேர்த்து பின் வாழ்க்கையில் சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை கோடிஸ்வரன் நாலு இட்லி தான் சாப்பிடமுடியும் ஏழை அதே நாலு இட்லி தான் சாப்பிடமுடியும்


தாமரை மலர்கிறது
மே 05, 2024 23:03

பெண்களுக்கு ஒரே பாதுகாப்பான புகலிடம் பிஜேபி தான்


RAAJA69
மே 05, 2024 20:31

சண்தேஷ் காலேயில் பெண்களை இழிவு படுத்தியது யார். அதை மூடி மறைக்க வீர வசனம் பேசி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.


krishna
மே 05, 2024 20:23

SANDHESH KALI SHAJAHAN SHEIKH UNGA TMC MLA MATTRUM GUNDARGAL ANGU ULLA PENGALUKU SEYYADHA KODUMAYAA.AVARGALAI KAAPAATRIYA NEENGAL IPPADI PESA VEKKAMA ILLAI.


தமிழ்வேள்
மே 05, 2024 20:15

ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு பெயர் பெற்றவர்கள் அவர்களின் புரவலரான மமதை பேகம் இன்று சொல்வது மிகவும் பெரிய நகைச்சுவை


Ramesh Sargam
மே 05, 2024 19:59

இழிவுபடுத்துவதே நீங்கள்தான் பேரழிவு, மன்னிக்கவும், பேரிழிவு நீங்கள்தான்


குமரி குருவி
மே 05, 2024 19:16

தேசத்தை நாசம் பண்ண வேண்டாம்...


sankar
மே 05, 2024 18:28

புள்ளிராசா கூட்டணியில் அவ்ளோவுமே பிராடுதான் போல


Lion Drsekar
மே 05, 2024 17:59

வேலைவாய்ப்பு , சுய தொழில் முனைவோருக்கு ஊக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசத்தின் இறையாண்மை, மக்கள் நலம், அனைவருக்கும் பாதுகாப்பு , இவைகளை பேசினால் நாடு வளர்ச்சி பெரும், வந்தே மாதரம்


ayen
மே 05, 2024 18:08

நாங்கள் அகதிகளை வைத்து தான் ஓட்டு வாங்குவோம், திட்டங்களை வைத்து இல்லை


மேலும் செய்திகள்











புதிய வீடியோ