உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை

கங்கமனகுடி: வரதட்சணை கொடுமையால் ஐ.டி., பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.விஜயநகராவை சேர்ந்தவர் பூஜா, 22. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு கங்கமனகுடியின் சுனில், 25 என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் கங்கமனகுடியில் தனியாக இருவரும் வசித்தனர். திருமணத்தின் போது சுனிலுக்கு, பூஜாவின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி, பூஜாவிடம், சுனில் கேட்டுள்ளார்.அதற்கு பூஜா மறுத்ததால், கணவன், மனைவி இடையில் தினமும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பூஜா நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பூஜாவை தற்கொலைக்கு துாண்டியதாக சுனில் மீது, கங்கமனகுடி போலீசில், பூஜாவின் பெற்றோர் புகார் அளித்தனர். சுனிலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

s sambath kumar
ஜூலை 12, 2024 12:11

ரெண்டு பேரும் ஐ டி யில் சம்பாதிக்கிறார்கள், அப்பறம் ஏன் இந்த சுனில் பயலுக்கு பண ஆசை? பணம் இல்லாதவர்களை விட இருப்பவர்களிடம் தான் பேராசை அதிகம் உள்ளது.


SUBRAMANIAN P
ஜூலை 06, 2024 13:48

உண்மையிலேயே அந்த பொண்ணு வரதட்சணை கொடுமையால் இந்த ஆளாலதான் தற்கொலை செய்துக்கிட்டாள் அப்படின்னா கொஞ்சமும் தயவுக்காட்டாம அவனை என்கவுன்ட்டருல போடுங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை