உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயபுராவில் நிலநடுக்கம்

விஜயபுராவில் நிலநடுக்கம்

விஜயபுரா: விஜயபுராவின் ஐந்து கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.கர்நாடகாவின் வட மாவட்டமான விஜயபுரா, மஹாராஷ்டிரா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்படும் போது, விஜயபுராவிலும் தாக்கம் இருக்கும்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தி. கோட்டா தாலுகாவின் சோமதேவரகட்டி, கோனசாகி, தக்கவடகி, தக்க லக்கி, பானுர் ஆகிய ஐந்து கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் குலுங்கி விழுந்தன. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.இது பற்றி அறிந்த பேரிடர் மீட்பு படையினர் கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நிலநடுக்கம் 1.6 ரிக்டேர் அளவாக பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை