உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 எம்.எல்.சி., பதவிகளுக்கு ஜூன் 3ல் தேர்தல் அறிவிப்பு

6 எம்.எல்.சி., பதவிகளுக்கு ஜூன் 3ல் தேர்தல் அறிவிப்பு

பெங்களூரு: ஆசிரியர், பட்டதாரி என ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கர்நாடக வட கிழக்கு பட்டதாரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.சி., சந்திரசேகர் பாட்டீல்; பெங்களூரு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஏ.தேவகவுடா; கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஒய்.ஏ.நாராயணசாமி; கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா ஆகியோரது பதவி காலம் ஜூன் 21ம் தேதி நிறைவு பெறுகிறது.மேலும், கர்நாடக தென் மேற்கு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த ஆயனுார் மஞ்சுநாத், 2023 ஏப்ரல் 19ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இது போன்று, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி.,யாக இருந்த மரிதிப்பேகவுடா, 2024 மார்ச் 21ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.மேற்கண்ட ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கும் என்று மத்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கான தேர்தல் கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.அதன்படி, வரும் 9ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கலுக்கு 16ம் தேதி கடைசி நாள். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, மே 20ம் தேதி கடைசி நாள். ஜூன் 3ம் தேதி காலை 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும். ஜூன் 6ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.இந்த ஆறு தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கும். அதன்பின், பட்டதாரி, ஆசிரியர் தொகுதி தேர்தல் குறித்து அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ