உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்: மீண்டும் ராகுல் விமர்சனம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்: மீண்டும் ராகுல் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை கருப்பு பெட்டி (பிளாக் பாக்ஸ்) யாகவே உள்ளது என காங்., எம்.பி ராகுல் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை கருப்பு பெட்டியாகவே உள்ளது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை எனில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒழிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுக்கு வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என நேற்று (ஜூன் 17) காங்., எம்.பி., ராகுல் கூறி இருந்தார். இன்று அவர் மீண்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

பேசும் தமிழன்
ஜூன் 18, 2024 08:48

பப்பு.... தேர்தல் ஆணையம் ஓட்டு போடும் இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று நிரூபிக்கும் ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்த போது.... நீ தூக்கத்தில் இருந்தாயா.... இல்லை பட்டாயா போய் விட்டாயா ??


Kalaiselvan Periasamy
ஜூன் 18, 2024 05:13

இவருக்கு ஒட்டு போட்ட மக்கள் எந்த அளவிற்கு சுயநலமாகவும் முதலாகவும் இருந்து இருக்க வேண்டும் என்பதையே இவரின் பேச்சு பறை சாற்றுகிறது. இப்போது உள்ள காங்ரஸ் கட்சி இந்தியா நாட்டை உருப்படாமல் செய்து விடும் . உழைக்க தயங்காத இந்தியர்களை இன்று இலவசத்திற்காக அலையும் கூட்டமாக மாற்றிய பெருமை திராவிட கட்சிக்கும் காங்ரஸ் கட்சிக்கும் உண்டு . தமிழர்களே தி மு காவை தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு நிலைமை என்றுமே இப்படி தான் .


Balaji
ஜூன் 18, 2024 01:25

இவர் வெற்றி பெற்றதை இவராலேயே நம்பமுடியவில்லை போலும்?


naranam
ஜூன் 18, 2024 00:52

இருண்டதெல்லம் பேய்


R.MURALIKRISHNAN
ஜூன் 17, 2024 23:34

பந்தி முடிந்து எல்லோரும் வேலைக்கே கிளம்பிட்டாங்கப்பா, இன்னும் டேபிள்ல உக்காந்து என்ன நோண்டிகிட்டிருக்கே


r ravichandran
ஜூன் 17, 2024 23:13

ராகுல் காந்தி இயந்திர வாக்கு மூலம் பெற்ற இரண்டு தொகுதியில் ராஜினாமா செய்து விட்டு பிறகு வாக்கு இயந்திரம் குறித்து பேச வேண்டும்.


Ashok Subramaniam
ஜூன் 17, 2024 22:12

வாக்குச் சீட்டு இருந்தால்தான் கள்ள ஓட்டு வாய்ப்புகளும், பொட்டிகளை அபகரிக்கும் பணிகளும், வேண்டியவர்களை வைத்து தில்லுமுல்லுகளும் அதிகரிக்கும். அதனால் தாங்கள் வெற்றி பெற இருந்த பெரிய வாய்ப்புக்கு, குந்தகம் நடந்தால் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியுமா பப்புவால்?


Saai Sundharamurthy AVK
ஜூன் 17, 2024 21:44

பூமியில் முளையற்ற இரண்டு ஜந்துக்கள் ஜீவித்திருக்க முடியும் என்றால் அவை காங்கிரசும் அதற்கு பல்லக்கு தூக்கும் பிடி இனமுமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கண்கூடு! "ஜெல்லி மீன்களுக்கு மூளை இல்லை" என்று அறிவியல் கூறுகிறது என்பது வேறு விஷயம்! 36%, 40% வட்டி தருகிறேன் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் பலரும் பெனிஃபிட் பண்டுகளில் டெபாசிட் செய்து ஏமாந்தார்கள். அப்படித்தான் கடாகட் காங்கிரஸின் ஆண்டுக்கு ஒரு லட்சம் டெபாசிட் வாக்குறுதியை நம்பி பிடிகள் ஓட்டு போட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப் பட்டிருக்கிறது. வழக்கு வெற்றி பெற்றால் 146 இடங்கள் காலியாகும்! அப்படியும் நாம் ஏன் வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சி காங்கிரசுக்கு இருக்கிறது! அதற்கு காரணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்று அது நம்புகிறது! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு-முல்லு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப கூறிய பின்னும், அது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒன்றுக்கு இரண்டு முறை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய பின்னும், இந்த உயிரினங்கள் அதை மீண்டும் மீண்டும் கிளறுவது ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது! நம்முடைய ஜனநாயக நடைமுறையை அந்நியர்கள் ஏளனம் செய்ய இவர்கள் துணை போகிறார்கள்! எந்தவொரு வெளிப்புற தொடர்பும் இல்லாத ஒரு இயந்திரத்தை ஹாக் செய்ய முடியாது என்பது ஆரம்பகட்ட கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கும் மாணவனும் அறிவான்! அது ஏன் எலான் மாஸ்க் போன்றவர்களுக்கு இல்லாமல் போனது! காரணம்? இந்தியாவை எள்ளி நகையாட வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு! இன்று நாம் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றால், அது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அல்ல, மாறாக 40 இடங்களைக் கூட வெல்ல முடியாது என்று பல கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்ட காங்கிரஸ் எப்படி 99 இடங்களை வென்றது என்பதாகத் தான் இருக்க வேண்டும்! மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் இவர்கள் ஒவ்வொரு அழிச்சாட்டியத் தையும் அவிழ்த்து விட்டு வருகிறார்கள்! அரசாங்கம் செட்டில் ஆவதற்கு முன்பு அதை அன்செட்டில் செய்ய வேண்டும் என்பது இவர்கள் முயற்சியாக இருக்கக்கூடும். ஆனால், இந்த அரசாங்கம் பத்தாண்டுகளாக பதவியில் இருக்கிறது. புதிதாக பொறுப்புக்கு வரவில்லை! ஆகவே, ஒரு நிமிடம்கூட விரயம் செய்யாமல், எதிர்க்கட்சி கூடாரத்தை காலி செய்ய வேண்டும்! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பற்றி அவதூறு பரப்பிய பத்திரிகை, இன்று "அது தவறாக பதிவாகி விட்டது" என்று மன்னிப்புக் கூட கோராமல் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதை மூலை முடுக்கெல்லாம் பகிர்ந்த காங்கிரசும் அதன் பிணந்தின்னி படையும் சிறிதும் வெட்கமின்றி அடுத்த பொய்யை பரப்ப சென்றுவிட்டது! (இன்று இரயில் விபத்து பற்றி!) பொய் செய்தி பரப்புவோரை அரசு கடுமையாக எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடுப்பது, ஜாமீனில் வர முடியாதபடி சிறையில் வைப்பது, நஷ்ட ஈடு வசூலிப்பது என்று அடித்து ஆட வேண்டும். ஸ்ம்ருதி இரானி போன்றவர்கள் தலைமையில் இதற்காக தனி அமைச்சகம் தொடங்கினாலும் தவறில்லை! இது ஏதோ பா.ஜ.க. என்ற ஒரு கட்சி சார்ந்த பிரச்சனை அல்ல! நாட்டின் ஜனநாயக மாண்பு தொடர்பான தன்மானப் பிரச்சனையாகும்! மோடி அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!! ?


shyamnats
ஜூன் 18, 2024 16:29

பி ஜே பி யின் வாக்கு வங்கி சரிவுக்கு , மோடிஜியின் குற்றவாளிகளை மென்மையாக கையாண்ட விதமும் ஒரு காரணம் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள் . இன்னும் தீவிரமான கையாளுதல் தேவை. ராவுல் போன்றோர் இப்படித்தான் உளறிக்கொண்டே இருப்பார்கள்.


sankaranarayanan
ஜூன் 17, 2024 21:18

இதுபோன்று அரசியல்வாதிகள் தத்து புத்துண்ண உளறக்கூடாது உச்ச நீதிமன்றமே இதுபோன்ற பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் அர்த்தமுள்ள பேச்சாகவும் நடைமுறைப்படுத்துபடியான அறிவுரைகளையும் கொடுக்கும் அரசியல்வாதிகளை ஆதரிக்க வேண்டும்


சகுரா
ஜூன் 17, 2024 21:07

அப்போ 2026 தேர்தலில் தோற்பது உறுதி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை