உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு: ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல்

ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு: ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை இன்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு ஜூன் 28 ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமின் சட்டத்துக்கு புறம்பானது எனவும், ஜாமினை ரத்து செய்ய கோரியும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அப்பீல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rao
ஜூலை 09, 2024 10:29

SC WILL not entertain ED requests,it will confirm HC order.


sankaranarayanan
ஜூலை 08, 2024 22:22

தமிழகத்திலும் அமைச்சர் பொன்முடியின் ஜாமினை எதிர்த்து விரைவில் எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கப்படுமா


தத்வமசி
ஜூலை 08, 2024 22:17

ஐயா, இவரை சில மாதங்கள் சியாசின் பகுதியில் இந்திய ராணுவத்துடன் இருந்து எடுபுடி வேலைகளை செய்யச்சொல்லுங்கள் ஐயா. எல்லாம் சரியாகி விடும். சும்மாவானா இவர ஜெயிலில் போட வேண்டாம்.


அப்பாவி
ஜூலை 08, 2024 22:15

ஜாமீன்ல வந்தவரை முதல்வராக்கும் சட்டம். கைது பண்ணிட்டு மேலே ஒண்ணும்செய்யத் தெர்யாத அமலாக்கத்துறை. விசாரிக்காமல் ஜாமீன் வழங்கும் நீதிமன்றம். இதுக்கெல்லாம் துணைபோகும் சட்டம். நாட்டில்நிறைய காமெடி பார்ட்டிங்க இருக்காங்க. பொழுது நல்லாப் போகுது கோவாலு. நம்மளைப் பாத்து உலகமே வியக்குது கோவாலு.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 08, 2024 21:22

குற்றம் நடந்துள்ளது என்று நிரூபிக்க பட்ட குற்றவாளிகளுக்கு எப்படி இந்த நீதிபதிகள் பொறுப்பில்லாமல் ஜாமின் கொடுக்கின்றனர்? கெஜ்ரிவால் ஜாமின் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்ததை நீதிபதிகள் கண்டுகொள்ளவே இல்லை. அதைவிட பொன்முடிக்கு கொடுத்த ஜாமின் மிக கேவலம்.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 08, 2024 21:07

முதல்வராக இருக்கும்போதே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார் சோரன். சாதிப் பெயர் தவிர்த்து சோரன் என்றால் ஹிந்தியில் திருடன்தானே.


மேலும் செய்திகள்