உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்பத்தையே கொன்ற மாஜி ராணுவ வீரர் கைது

குடும்பத்தையே கொன்ற மாஜி ராணுவ வீரர் கைது

அம்பாலா:நிலத் தகராறில் தாய், சகோதரன் மற்றும் சகோதரரின் மனைவி உட்பட 6 பேரை வெட்டிக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நரேன்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஷண் குமார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கும் சகோதரர் ஹரீஷ் குமாருக்கும் நிலத் தகராறு இருந்தது. அவரது தாயும் சகோதரருக்கு ஆதரவாகவே பேசி வந்தார். இதனால் பூஷண் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.நேற்று முன் தினம் இரவு, துாங்கிக் கொண்டிருந்த தாய் சரூபி தேவி, 65, சகோதரர் ஹரீஷ் குமார், 35, ஹரீஷின் மனைவி சோனியா, 32, மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பாரி, 7, யாஷிகா, 5 மற்றும் 6 மாத குழந்தையான மயங்க் ஆகிய ஆறு பேரையும் பூஷண் குமார் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து, ஆறு உடல்களை எரிக்க முயற்சி செய்தார். அப்போது அவரது தந்தை ஓம் பிரகாஷ் வந்தார். அவரையும் கோடரியால் வெட்டி விட்டு பூஷண் குமார் தப்பி ஓடினார்.தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த பிரகாஷை மருத்துமனையில் சேர்த்தனர். மேலும், உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பூஷண் குமாரை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ