உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு

காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானின் ஆதரவு பெற்ற சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடாக அறிவிக்கக் கோரி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த அமைப்பு வன்முறை சம்பவங்களை பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரங்கேற்றி வருகின்றன.மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று, அந்நாட்டு குடியுரிமை பெற்று, அங்கு சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். அங்கிருந்தபடி நம் நாட்டில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.இந்நிலையில், கனடா வில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் நடத்தி வரும், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' எனப்படும் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு நம் நாட்டில் 2019-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
ஜூலை 10, 2024 10:02

வெறி பிடித்த இவனை எப்போது யார் தூக்கப் போகிறார்களோ!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 21:21

பன்னூன் அமெரிக்காவில் சுகபோகமாக வாழ்ந்து வருகிறார் ... அமெரிக்க அரசின் அனுமதியில்லாமல் இது நடக்குமா ??


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை