உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: '22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்க முடியவில்லை' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் பேசியதாவது: மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் மட்டும் தான் அதானி நிறுவன பங்கு சந்தைகள் உயரும். அரசியலைப்பு சட்டத்தை ஒழிப்போம் என பா.ஜ., தலைவர்கள் கூறுகிறார்கள். அரசு துறைகளில் 30 லட்சம் காலியிடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த வேலைகளை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவோம். பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு, ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி

ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வரும் வரை ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 10 ஆண்டுகளில் 22 பேரின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்க முடியவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bala Paddy
மே 26, 2024 16:39

உங்க குடும்பம் 60 வருஷம் இந்தியா வ நாசம் ஆக்கிடீங்க.


Mohan
மே 26, 2024 16:11

ஐயா ராகுல்ஜி அவர்களே 22 முதலாளிகள் தர வேண்டிய கடன் பணத்தை மோடி தள்ளுபடி செய்ததாக சொல்லுகிறீர்களே முதலில் அவர்களுக்கு கடன் தந்ந மேனேஜர் மோடியை கேட்டு தந்தாரா? வங்கிகள் கேட்க வேண்டிய கடன் தவணைகளை நேரத்தில் கேட்டதனால், அவர்களிடம் கேட்காதே என்று மோடி கூறியது போல சொல்ரேங்க - மற்ற முக்கிய வேலைகளைவிட்டுட்டு இதை பாக்குறமாதிரி கொஞ்சம் ....பாக்கி இருக்குது. 30 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைகளை தர ஏற்பாடு செய்வதாக சொல்கிற மகா புத்திசாலி ராகுல்ஜி அவ்வளவு பேருக்கு சம்பளம் தர ""சர்வீஸ் டாக்ஸ் ஐடியா தந்த திருதிரு. ப.சிதம்பரம் அவர்களை கேட்டு வேற டாக்ஸ் ஐடியா யோசித்து வைக்க சொல்லுங்க ப்ளீஸ்


Ravichandran S
மே 26, 2024 16:00

வடிகால் வாரியத்திற்கு கொடுத்த பணத்தை சிலவு செய்து விட்டு எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் நிற்காதுன்னு பணத்தை கொடுத்தா. வறுமை ஒழிப்புன்னு பலவித கோஷங்கள் போட்டு வறுமையை ஒழிச்சுட்டாங்க இதல்லாம் இப்ப இருக்கிறவங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு நினைச்சேன்


Syed ghouse basha
மே 26, 2024 14:56

முடியட்டும் மோடி அரசு விடியட்டும் இந்திய மக்களுக்கு ஆளட்டும் இந்திய கூட்டணி பிரதமர்ஆகட்டும் இளம் தலைவர் ராகுல்ஜி


hari
மே 26, 2024 16:38

... ராகுல் ராகுல்ன்னு ஒரே


hari
மே 26, 2024 17:48

கடைசியில் மக்கள்..........


Balasubramanyan
மே 26, 2024 14:15

So this fellow will give employment to all educated youngsters without the help of enterpruners like TATA,MAHENDRA,JIO,ADHANI,TVS ,.HIS BROTHER INLAW WILL HELP HIM AND START BINAMI COMPANIES. HOW MUCH CONGRESS GOVT GAVE TO STATES ON DROUGHT OR CYCLONE DAMAGES. INDIA TODAY HAILS HIS MEANINGLESS TALK AS FIERY SPEECH. WILL ANY CONGRESS LEADER FROM TAMILNADU EXPLAIN HOW HIS PARTY DELIVER ALL PROMISES.HOW MUCH WILL BE THE EXPENDITURE.


vadivelu
மே 26, 2024 14:12

சாரே தொண்டை வற்றி விட போகிறது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு தயார் செய்து கொள்ளுங்கள், கதறித்தான் ஆக வேணும்.


Balasubramanian
மே 26, 2024 14:00

இவர் கையில் அட்சய பாத்திரம் இருக்கிறது! யார் எது கேட்டாலும் டகா டக் டகா டக் என்று கொடுத்து விடுவார்! அதே மாதிரி இவர் சொன்ன 22 நபர்களும் கடன் தள்ளுபடி செய்ததற்கு ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டாலும் டக் என்று கொடுத்து விடுவார்


ஆரூர் ரங்
மே 26, 2024 13:55

அந்த இருபத்திரண்டு முதலாளிகளும் INDIA ஆளும் மாநிலங்களில் செய்துள்ள முதலீடுகள் வேண்டாமென்று கூறும் தைரியமுண்டா?


Sivakumar Subramani
மே 26, 2024 13:49

நீங்க கொடுத்தீங்க


Sivakumar Subramani
மே 26, 2024 13:48

வேஸ்ட்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை