உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஐந்து போலீசார் டிஸ்மிஸ்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஐந்து போலீசார் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஐந்து போலீசார் உட்பட ஆறு பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தேச விரோத செயல்களில் ஈடுபட்ட காவல் துறையைச் சேர்ந்த பரூக் அகமது ஷேக், சைப் தின், காலித் ஹுசியன் ஷா, இர்ஷாத் அகமது சால்கூ, ரஹ்மத் ஷா மற்றும் ஆசிரியர் நஜாம் தின் என, மொத்தம் ஆறு பேரை பணியில் இருந்து நீக்கி, துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுஉள்ளார். இதில், பரூக் அகமது ஷேக் தலைமை காவலராகவும், சைப் தின், காலித் ஹுசியன் ஷா, இர்ஷாத் அகமது சால்கோ ஆகியோர் தேர்வு நிலை காவலர்களாகவும், ரஹ்மத் ஷா கான்ஸ்டபிளாகவும் பணியாற்றி வந்தனர்.போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில், இவர்களுக்கு தொடர்பு இருப்பதை மத்திய விசாரணை அமைப்புகள் கண்டறிந்ததை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டனர். தோடா மாவட்டத்தின் ஷிகானி பல்லேசா என்ற பகுதியைச் சேர்ந்த சைப் தின், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதோடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வேலை செய்தார். குப்வாரா மாவட்டத்தின் இப்கூட் டாங்தார் பகுதியில் வசிக்கும் தலைமை காவலரான பரூக் அகமது ஷேக், காலித் ஹுசியன் ஷா மற்றும் ரஹ்மத் ஷாவுடன் இணைந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கடத்தல்காரர்களிடமிருந்து, ஏராளமான போதைப் பொருட்களை வாங்கி வினியோகம் செய்துள்ளனர். மேலும் இந்த மூன்று பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தனர்.பாரமுல்லாவின் யூரியின் சிலிகோட் பகுதியில் வசிக்கும் இர்ஷாத் அகமது சால்கோ, லஷ்கர் - -இ- - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு வேலை செய்து வந்துள்ளார். பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி ஹவேலியில் வசிக்கும் ஆசிரியர் நஜாம் தின், போதைப் பொருட்களை கடத்தியதோடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

subramanian
ஆக 04, 2024 10:00

காங்கிரஸ் கட்சி மோடி எதிர்ப்பை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பை, இறையாண்மையை உறுதி செய்ய ஒத்துழைக்கவேண்டும் .


subramanian
ஆக 04, 2024 09:57

வங்கி கணக்கிற்கு KYC இருப்பது போல ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் KYC சமர்பிக்க வேண்டும்.


subramanian
ஆக 04, 2024 09:54

முஸ்லிம் தீவிரவாதம் உலகிற்கும் முஸ்லிம் மக்களுக்கும் தீங்கானது. முஸ்லிம் பெரியவர்கள் கூறும் நல்ல சொற்களை முஸ்லிம் மக்கள் பின்பற்ற வேண்டும்.


rao
ஆக 04, 2024 08:52

They should be prosecuted for their criminal act.


Nandakumar Naidu.
ஆக 04, 2024 08:31

இவர்கள் எப்போதுமே நம்ப தகுதியற்றவர்கள். நம்பிக்கை திரோகிகள்.


Kasimani Baskaran
ஆக 04, 2024 06:34

அது எப்படி சாத்தியம் என்று பார்த்தால் அது தமிழகத்தில் இல்லை காஷ்மீரில் என்ற பொழுதுதான் புரிந்தது... இராணுவத்தை விட்டு போட்டுத்தள்ளி இருக்க வேண்டும். தவறு செய்து விட்டார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை