உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லக்கம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு * சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

லக்கம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு * சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் லக்கம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடப்பட்டது. பகலில் மழை குறைந்த நிலையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணிப்படி மாவட்டத்தில் சராசரி மழை 48.38 மி.மீ., பதிவானது. அதிக பட்சமாக பீர்மேடு தாலுகாவில் 95.2 மி.மீ., மிகவும் குறைவாக உடும்பன்சோலை தாலுகாவில் 5.4 மி.மீ., மழை பெய்தது. தேவிகுளம் 64.8, இடுக்கி 52.4, தொடுபுழாவில் 24.1 மி.மீ., மழை பெய்தது.

அணை திறப்பு

மாவட்டத்தில் செப்.2 வரை பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி நேற்றுமதியம் 12:30 மணிக்கு பாம்ளா அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக மூணாறில் 84 மி.மீ., மழை பதிவானது. நேற்று பகலிலும் மழை தொடர்ந்தது.

தடை

மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் லக்கம் நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி உண்டு. நீர்வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை