மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
காங்டாங்:சிக்கிம் மாநில தேர்தலில் போட்டியிட்ட இந்தியாவின் கால்பந்து ஜாம்பவானான பாய்சங்பூட்டியா தோல்வி அடைந்தார்.சிக்கிம் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. இந்தியாவின் கால்பந்து அணியின் கேப்டன் பொறுப்பு வகித்ததுடன் போட்டியிலும் ஜாம்பவனாக திகழ்ந்தவர் பாய்ச்சங் பூட்டியா. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் ஜனநாயக கட்சி சார்பில், நாம்சி மாவட்டத்திற்குட்பட்ட பர்பங்க் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,விடம் சுமார் 4ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆளும் கட்சி வேட்பாளர் 8,358 வாக்குகள் பெற்றிருந்தார். பூட்டியா 4,012 வாக்குகள் பெற்றார். சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டசபை தொகுதிகளில் 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.கடந்த 2019-ம் ஆண்டு வரையில் சிக்கிம் ஜனநாயக கட்சி தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2