உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்ணாதுரை பிறந்த நாள் பெண்களுக்கு இலவச சேலை

அண்ணாதுரை பிறந்த நாள் பெண்களுக்கு இலவச சேலை

பெங்களூரு: கர்நாடக மாநில அ.தி.மு.க., சார்பில் ஸ்ரீராமபுரம் சாய்பாபா திருமண மண்டபத்தில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.மாநில துணை செயலர் ராஜா தலைமையில் நடந்த விழாவில், தமிழக முன்னாள் எம்.பி.,யும்; மாணவர் அணி செயலருமான விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.அண்ணாதுரை படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெண்களுக்கு விலையில்லா சேலைகள் மற்றும் அறுசுவை உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.ஜெ., பேரவை செயலர் சுப்பிரமணி, எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர் சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் ரவிகுமார், இளைஞர் அணி இணை செயலர் மர்பி டவுன் குமார், தொகுதி செயலர்கள் காந்திநகர் சண்முகம்மஹாலட்சுமி லே - அவுட் மணி, ஜாலஹள்ளி கண்ணன், வட்ட செயலர் பிரபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜன், ரவி, பன்னீர்செல்வம், வில்வநாதன், மாவட்ட துணை செயலர் திருவேங்கடம், மகளிரணி செயலர் சாந்தி ராமதாஸ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கர்நாடக மாநில அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், தமிழக முன்னாள் எம்.பி.,யும், மாணவர் அணி செயலருமான விஜயகுமார் பேசினார். உடன், மாநில துணை செயலர் ராஜா, எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர் சடகோபன் உட்பட கட்சியினர். இடம்: ஸ்ரீராமபுரம், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ