உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

பீதர்: அவுராத் வழியாக மஹாராஷ்டிராவுக்கு, கடத்தி செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிஷாவில் இருந்து, மஹாராஷ்டிராவுக்கு பீதரின், அவுராத் வழியாக பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெங்களூரின் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், போலீசார் நேற்று மாலை பீதருக்கு சென்றனர். அவுராதின், வனமாரபள்ளி அருகில் வாகனங்களை சோதனையிட்டனர். ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது, கஞ்சா மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,500 கிலோ கஞ்சாவை லாரியுடன் பறிமுதல் செய்தனர். அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை