உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

மைசூரு: மைசூரு மாவட்டம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஷோபா, 40. இவரது மகன் திலிப், 17. மாகடியில் உள்ள பி.ஜி.எஸ்., கல்லுாரியில் பி.யு.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு குளிப்பதற்காக தண்ணீரை சூடாக்கும் காஸ் கீசரை 'ஆன்' செய்துவிட்டு குளிக்கச் சென்றார். குளியல் அறையில் ஜன்னல் இல்லை.நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று ஷோபா பார்த்தபோது, திலிப் மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தார்.அதிர்ச்சியடைந்த ஷோபா, மகனை எழுப்ப முயற்சித்தார். அப்போது அவரும் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தார்.பணிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்த மூத்த மகள், தாயும், சகோதரனும் மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.மாகடி போலீசார் விசாரிக்கின்றனர்.படம்: ஷோபா, திலிப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ganapathy
ஜூலை 23, 2024 19:23

மின்கெய்ஸரில் கேஸ் எங்கிருந்து கசியும்?


என்றும் இந்தியன்
ஜூலை 23, 2024 17:51

வெறும் கீசர் என்று போடாமல் காஸ் கீசர் என்று போடுங்கள். கீசர் என்றால் எல்லோரும் நினைப்பது எலக்ட்ரிக் கீசரைத்தான்


VJ VJ
ஜூலை 23, 2024 13:46

A gas geyser, in an enclosed space without proper ventilation can emit carbon monoxide, which interferes with body's ability to transport oxygen in the bloodstream and result in brain damage if the person is exposed to high levels of the gas for an extended period of time. - from internet


Barakat Ali
ஜூலை 23, 2024 10:38

வாயுவை சுவாசித்ததால் மரணம் .....


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 23, 2024 10:33

நம்ப முடியவில்லை. எல் பி ஜி கேஸ் லீக் ஆனால் மயக்கம் வராது. குமட்டும் வாந்தி வரும். மூச்சுத்திணறல் வராது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 12:10

அது எல் பி ஜி யாக இருக்காது .... பி என் ஜி யாக இருக்கும் ..... அதில் மீத்தேன் மட்டும் அதிகமிருக்கலாம் .... அல்லது முழுக்க முழுக்க மீத்தேனாக இருக்கும் .... குமட்டாது .... முதலில் மயக்கம் ... பிறகு மரணம் .... மூடிய ஜன்னலாக இருப்பதால் ஒரே அறையில் மீத்தேன் முடக்கம் ....


மேலும் செய்திகள்





புதிய வீடியோ