உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்குங்க: பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்குங்க: பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இன்று (ஜூலை 04) பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு நேரில் சந்தித்தார். பிரதமரிடம் ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.ஆந்திரா மாநில நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது. டில்லியில் இன்று பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு நேரில் சந்தித்தார். பல முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பிரதமரிடம் ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார் என தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். நாளை (ஜூலை 05) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச உள்ளார். தற்போது பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முக்கியம் வாய்ந்த தலைவராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். இதனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
ஜூலை 05, 2024 07:20

இலவசங்களைத் தேடி அலையும் மக்களால் அரசுகளுக்கு அவதி.


venugopal s
ஜூலை 04, 2024 22:35

பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றி ஆந்திராவுக்கு வரிச்சலுகை கொடுத்து விடலாம். டீசல் விலையை ஐந்து ரூபாய் ஏற்றி பீகாருக்கு வரிச்சலுகை கொடுத்து விடலாம். அவ்வளவு தான், வெகு சுலபம்!


K.n. Dhasarathan
ஜூலை 04, 2024 21:29

பிரதமருக்கு தலைவலி ஆரம்பம். இனிமேல்தான் இவருடைய ஆளுமை தன்மை வெளிப்படணும் .நடக்குமா?


கங்காரெட்டி
ஜூலை 04, 2024 18:54

பேய்க்கு வாக்கப்பட்டால் புளியமரம் ஏறணும்...


Ramesh Sargam
ஜூலை 04, 2024 16:44

நாயுடு ஆரம்பிச்சுட்டார் தன்னுடைய “வேலையை”।


vbs manian
ஜூலை 04, 2024 16:32

வரி சலுகை மட்டும்தானா.


Indian
ஜூலை 04, 2024 14:59

கொடுத்துருங்க இல்லனா ஆட்சி போய்விடும்..இதுக்கு பதிலா மற்ற மாநிலத்திலிருந்து ...


இவன்
ஜூலை 04, 2024 16:23

சரி கொடுக்கட்டும் என்ன இப்போ? உங்கள மாதிரி சாராயம் கஞ்சா விக்கல நாய்டு ??


மேலும் செய்திகள்