உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 வெளிநாட்டவர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 வெளிநாட்டவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை விமான நிலையத்தில் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விமானத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகளை கண்டு, 2 வெளிநாட்டவர்கள் ஓடி மறைந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேர் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, அவர்களிடம் இருந்து ரூ.19 கோடி மதிப்புள்ள 32.79 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் பயணிகளும் உள்ளாடைகள் மற்றும் பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்த முயற்சி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bala
ஜூன் 10, 2024 17:54

தங்க கடத்தலை தடுத்துதிற்கு பாராட்டுகள்.


Apposthalan samlin
ஜூன் 10, 2024 17:19

கொஞ்ச நாளில் இந்த தங்கம் காணாமல் போயிரும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை