உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால் அரசு கவிழும்: குமாரசாமி

என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால் அரசு கவிழும்: குமாரசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு : ''என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால், அரசு கவிழ்ந்து விடும்'' என்று, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.முன்னாள் முதல்வர் குமாரசாமி, மைசூரில் நேற்று அளித்த பேட்டி: ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால், எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் வேலையை, காங்கிரஸ் அரசு செய்கிறது. வரும் 30 ம் தேதி எம்.பி., பிரஜ்வலுக்கு எதிராக, ஹாசனில் பெரிய அளவில் போராட்டம் நடத்த, அழைப்பு விடுத்து உள்ளனர். அங்கன்வாடியில் பணியாற்றும், பெண்களை போராட்டத்திற்கு அனுப்ப, அதிகாரிகளிடம் கூறி உள்ளனர்.

சிடி தொழிற்சாலை

எம்.பி., பிரஜ்வலுக்கு ஆதரவாக, நான் இல்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படட்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து, நாங்கள் போராட்டம் நடத்துவோம். பிரஜ்வல் பென்டிரைவ் வெளியானதன் பின்னணியில், பா.ஜ., பிரமுகர் தேவராஜேகவுடா, முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளனர்.பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கை ஏன், இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 1980ல் காங்கிரசில், ஒரு பெரிய தலைவர் சிடி தொழிற்சாலை திறந்தார். அங்கிருந்து சிடி க்கள் தயாரிக்கப்படுகின்றன.

கதை கட்டுவர்

ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. எங்களுக்கு பதவி மீது ஆசை இல்லை. பதவிக்காக யாரையும் நாடவில்லை. ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேல் மூலம், காங்கிரஸ் எம்.பி., சுரேஷை, கார் டிரைவர் கார்த்திக் சந்தித்தார். அவரிடம் இருந்த பென்டிரைவில் இருந்து, வீடியோக்களை காபி செய்தனர்.என்னிடமும் ஒரு பென்டிரைவ் உள்ளது. அது வெளியானால் அரசு கவிழும். இப்போது வெளியிட்டால் அது பொய் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கதை கட்டுவர். அந்த பென்டிரைவை, நேரம் வரும்போது வெளியிடுவேன். சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் சரண் அடையும்படி, பிரஜ்வலுக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கிறேன். ரேவண்ணாவுடன், பிரஜ்வல் தொடர்பில் இல்லை. இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

kulandai kannan
மே 23, 2024 18:13

உங்க பென்டிரைவ்தான்


VENKATESAN V
மே 23, 2024 10:29

ஆதாரத்தை வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருப்பதும் தவறு ஐய்யா


Srprd
மே 23, 2024 09:26

He wants to threaten some persons...sheer blackmailing. He is expecting something in return for withdrawing the threat..a few hundred crores perhaps.


GoK
மே 23, 2024 09:14

தென்இந்தியாவிலேயே போட்டா போட்டி சாதி வாரி அரசியல்ல சிறந்தது எந்த மாநிலம்னு தமிழ்நாட்டுல சாதி ஒழிச்சோம்னு கூவிக்கிட்டு ஒரு தடிக்கரான படத்த வச்சி பொழப்பு நடத்துற கூட்டம் பக்கத்துல வொக்கலிகன் லிங்காயத்து சிறுபான்மைன்னு ஒரு வியாபாரம் இன்னொரு பக்கம் புரட்ச்சி இப்போ வருது அப்போ வருது அப்படின்னு கம்யூனிஸ்ட்காரன் ஒரு பக்கம் எங்க குடும்பம் ரொம்ப பெரிசுன்னுட்டு காங்கிரெஸ்க்காரன் இன்னொரு பக்கம்ஒரு வழி பண்ணிடுவானுங்க வெள்ளைக்காரனை வெரட்டினோம் இப்போ கொள்ளைக்காரனுங்க வந்துட்டானுங்க


Duruvesan
மே 23, 2024 09:08

அதுல ரேவண்ண மகன் படம் இருக்கும் சும்மா எதுக்கு பீலா


Anbuselvan
மே 23, 2024 08:18

குற்றம் செய்வது தண்டனைக்கு உரியது எனில் குற்றத்தை மறைப்பது கூட தண்டனைக்கு உரியதுதான் என்பதை இவர் உணராமலா பேசுகிறார் அதெல்லாம் இல்லை பொதுவாக இதை போன்ற விஷயங்களை வைத்து வியாபாரம் செய்வார்கள், பேரம் நடக்கும் அவ்வளவுதான் வாழ்க அரசியல்


Naga Subramanian
மே 23, 2024 06:37

இது ஒரு அப்பட்டமான பிளாக் மெயில் அந்த பென் டிரைவை உரிய நீதி மன்றத்தில், ஏன் சமர்ப்பிக்க கூடாது? மக்களாகிய நாம் இந்த மாதிரியான அவலங்களை காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்


V.Rajamohan
மே 23, 2024 06:37

நாலு சாத்து சாத்தி அந்த pen டிரைவ் வை போலீஸ் பிடுங்கி கோர்ட் டில் ஒப்படைக்கவேண்டும்.


RAJ
மே 23, 2024 06:33

என்ன நடத்துக்குது அங்க ஆளு ஆளுக்கு pendrive வெச்சுகிட்டு அசிங்கப்படுத்துறீங்க எங்க பிரகாஷ்ராஜை காணோம் தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா


Kasimani Baskaran
மே 23, 2024 06:18

பெண் டிரைவோ ஆண் டிரைவோ எதுவானாலும் வெளியிட்டு தொலைக்க வேண்டியதுதானே இதற்க்கெல்லாம் சுபமுகூர்த்தம் பார்த்துக்கொண்டு இருந்தால் உருப்படாது எதிரிக்கு எதிரி எதிரிதான் என்ற காங்கிரசின் மாறுபட்ட கோட்பாடு இவருக்கு புரிய வாய்ப்பில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை