உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதுடன், இதில் ஈடுபட்டுஉள்ளோருக்கு வழங்கிய லைசென்சை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழகம் உட்பட, நான்கு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிட்டதாவது:இந்த வழக்கு, 2018ல் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசுக்கு இழப்புஇதில், பஞ்சாப் அரசு மட்டும் பதில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லை.சுற்றுச்சூழலுடன் பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதையடுத்து, அமர்வு கூறியுள்ளதாவது:இந்த விவகாரம் தொடர்பாக, இந்த நான்கு மாநிலங்களும், ஆறு வாரங்களுக்குள் தங்களுடைய பதிலை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை மிகவும் குறைவு என்றாலும், தங்களுடைய பொறுப்பை இந்த மாநிலங்கள் உணர்வதற்காக இது விதிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் நிலவரம் தொடர்பாக, தனியாக துணைக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அமர்வு, அதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், சட்டவிரோத மணல் கொள்ளை மிகவும் தீவிரமாக உள்ளது.இது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன.

சி.பி.ஐ., விசாரணை

மாநில அரசுகளின் உரிய விதிமுறைகள் இல்லாததால், மணல் கொள்ளை மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்புடன், குடிமக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.இதுவரை நடந்துள்ள மணல் கொள்ளைகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும், மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறது. இதையெல்லாம்விட அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.குறிப்பிட்ட அளவுக்கு லைசென்ஸ் பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட அந்த லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

s chandrasekar
ஜூலை 18, 2024 04:50

ஏதோ மக்களுக்கு கன்னித்தீவு மாதிரி ஒரு பொழுது போக்கு நிகழ்வு . காவிரி தண்ணீர் தமிநாட்டுக்கு கானல்நீர் . பிஜேபி தமிழ்நாட்டில் நுழைந்துவிடும் . கவனம் .


Suriyanarayanan
ஜூலை 17, 2024 17:27

எல்லாம் கடவுள் சித்தம். அவன் இன்றி ஒர் அனுவும் அசையாது அரசியல் இவன் இன்றி எதுவும் நடக்கும் உலகம் உருண்டை இவர் இல்லையேல் அவர்.


theruvasagan
ஜூலை 17, 2024 09:54

2018ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு பிரதிவாதிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லையாம். இப்போதும் பதில் தராவிட்டால் 20000 அபராதமாம். அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பது தெரிகிறது.


Saai Sundharamurthy AVK
ஜூலை 17, 2024 08:30

20,000 ரூபாய் அபராதம் தானே ! கட்டி விட்டு போகிறோம் ! ஆனால், பதில் மட்டும் தர முடியாது. என்ன செய்வாய் ???


GMM
ஜூலை 17, 2024 07:47

உயர் பதவி நிர்வாக அதிகாரிகள் மாநிலத்தில் நியமனம், இட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை... போன்ற அனைத்திற்கும் அரசியல் சாசன கவர்னர் ஒப்புதல் கட்டாயம். மாநில மந்திரிகள் பதவி அரசியல் சாசன பதவி கிடையாது? பல மந்திரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் மூலம் மட்டும் விசாரிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் முறையைவிட்டு வெளியேற வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்வாக விசாரணை பாதிக்கபட்ட, பலன் அடைந்தவரிடம் நேரடியாக நடக்கும். இதில் அதிக உண்மை தெரிய வரும். அரசியல் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு உதவுவது குறைவு. அதிகாரிகள் ஆளும்கட்சி ஆலோசனை கேட்டு பதில் கொடுப்பர். கவர்னர் பதவியை பொருட்படுத்துவது கிடையாது. பதிலில் பயன் தெரியாது.


Sundar
ஜூலை 17, 2024 07:38

புடிச்சு உள்ள போடாம ரூ. 20,000 fine போடுமாம்... நீதி மன்றம் கேலிக்கூத்து.


Svs Yaadum oore
ஜூலை 17, 2024 06:23

நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், சட்டவிரோத மணல் கொள்ளை மிகவும் தீவிரமாக உள்ளதாம் ....இது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.....இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும், மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறதாம் ......ஆனால் இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாம் ....ஆனால், நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமான தமிழகம், இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லையாம் ....


s chandrasekar
ஜூலை 18, 2024 04:41

இதுதான் உண்மையான உண்மையான ஜன நாயகம் . வாழ்க இந்தியா.


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 05:25

உயர் கல்வி மட்டுமல்ல கூடுதலாக அதிகாரிகள் பலரும் தப்பிக்க 20,000 கோடி கூட கொடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் உயர் கல்வியில் வழக்கை தரைக்கு கொண்டுவர ஒருவருக்கும் உரிமை இல்லை என்பது போல தீர்ப்பு கொடுத்த நீதிமன்றத்தின் நிலைப்பாடு நினைவில் இருக்கலாம். மணல் மாபியாக்களுக்கு பயந்து நீதிமன்றமே ஒதுங்கிக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை