உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

ஹத்ராஸ் சம்பவம்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டில்லி போலீசில் சரண்

புதுடில்லி: உ.பி, ஹத்ராசில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் 121 பேர் பலியான சம்பவத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ் மதுகர் என்பவர் டில்லி போலீசில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவப்பிரகாஷ் மதுகர் என்பவரை உ.பி. போலீசார் தேடி வந்தனர். அவரது தலைக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்தனர்.இந்நிலையில் இன்று இரவு டில்லி போலீசில் தேவப்பிரகாஷ் மதுகர் சரணடைந்தார். அவரிடம் உபி. போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 06, 2024 05:33

மது வை விட மத போதை வேதனை விஷயம் , 166 பேர் இறப்பு , பெரியார் அங்கு வரணும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை