உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி என்றும் சொல்லலாம்: என்.சி.இ.ஆர்.டி.,

ஹரப்பா நாகரிகத்தை சிந்து - சரஸ்வதி என்றும் சொல்லலாம்: என்.சி.இ.ஆர்.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஹரப்பா நாகரிகம் என்பதை, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என, என்.சி.இ.ஆர்.டி.,யின் ஆறாம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது.இந்த கவுன்சில் தயாரிக்கும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி இடைநிலை வாரியம் உட்பட பல கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன.தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை அறிவோம் - இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பின் கீழ் வரும் பாடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தொல்லியல் துறையினர், ஹரப்பா நாகரிகத்துக்கு பல பெயர்களை கொடுத்துள்ளனர். இண்டஸ், ஹரப்பன், இண்டஸ் - சரஸ்வதி, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.ஹரப்பா என்பது நிலப்பரப்பையும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும்.அதனால், சிந்து - சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதைத் தவிர, சரஸ்வதி நதி தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது.இந்த நதி குறித்து, ரிக் வேதம் உட்பட பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூலை 22, 2024 14:57

பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம் என்ற செந்தில் காமெடி போல் உள்ளதே!


Barakat Ali
ஜூலை 22, 2024 20:48

செந்திலைவிட புலிகேசி மன்னர் காமெடியில் சிறந்தவர் .....


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 10:21

உண்மையான(?) திராவிட இயக்கம் கவுல் பிராமணரைத்தானே பிரதமராக்கப் பாடுபட்டது?


Barakat Ali
ஜூலை 22, 2024 08:55

நான்கு வர்ணங்கள் இல்லாத இனமே இல்லை .... வேறுபாடு இல்லாத இனம் இருக்க வாய்ப்பே இல்லை .....


S S
ஜூலை 22, 2024 08:19

ஆரியம் நமது மண்ணின் கலாச்சாரம் அல்ல. திராவிடம்தான் இங்கே தோன்றியது


Svs Yaadum oore
ஜூலை 22, 2024 08:57

ஆனால் வடக்கன் உத்தர பிரதேசம் வருங்கால பாரத பிரதமர் ....வடக்கன் சிறுபான்மை மணிப்பூர் எல்லாம் திராவிடனுங்க ...இதுதான் சமூக நீதி மத சார்பின்மை திராவிடம் ..


Anand
ஜூலை 22, 2024 11:12

கள்ளக்குடியேறி மூர்க்கனுங்க தான் உண்மையான திராவிடனுங்க.. இத்தாலி கோமாளி தான் உண்மையான திராவிடன், இத்தாலி மாபியா தான் உண்மையான திராவிடர்கள்.


Balasubramanian
ஜூலை 22, 2024 12:40

வேங்கை வயல் கள்ளக்குறிச்சி எல்லாம் திராவிடர்கள் தானா.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 07:40

ஆரியப் படையெடுப்பு என்பது நடந்ததில்லை.இட்டுக் கட்டிய பொய் என்பதை டாக்டர் அம்பேத்கர் கூறியது. ஹரப்பா நாகரீகம் என்பது திராவிட பொய்க்கு சம்பந்தமில்லாதது.


Joseph
ஜூலை 22, 2024 08:30

ஆரியர்கள் வந்தவர்கள் என்பதை மூட என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் இந்த ஆட்சியாளர்களால். அதனால் ஒன்றும் ஆகப்போறதில்லை..


Svs Yaadum oore
ஜூலை 22, 2024 06:39

சரஸ்வதி நதி குறித்து, ரிக் வேதம் உட்பட பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது....ஹரப்பா நாகரிகம் என்பதை, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என, என்.சி.இ.ஆர்.டி.....இதை படித்து மதம் மாற்றிகளுக்கு அப்படியே எரியும் .....சுதந்திரத்திற்கு பிறகு அணைத்து காங்கிரஸ் மத்திய அமைச்சரும் சிறுபான்மை ....வரலாற்றை மொத்தமாக மாற்றி விட்டார்கள் ....தமிழ் நாட்டில் வள்ளுவர் மேய்ப்பர் .....சினிமா தொலைக்காட்சி பத்திரிகை என்று மதம் மாற்றிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்பு ....பள்ளி கல்வி முழுக்க இங்கு மதம் மாற்றிகள் ...இந்த மதம் மாற்றிகள்தான் தமிழ் நாட்டில் கல்வியாளர்கள் ....


Kasimani Baskaran
ஜூலை 22, 2024 05:57

பிரிட்டிஷ் ஆய்வு செய்தால் மட்டுமே ஓகே. நம் வேதத்தை அடிப்படையாக காட்டினால் பலருக்கு கெட்ட கோபம் வரும். அல்லது கீழடி போல ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும். கடலுக்கும், நதிகளுக்கும் பக்கத்தில் ஆய்வு செய்தால் உண்மை தெரிந்து விடும் - அங்கெல்லாம் போகவே கூடாது.


மேலும் செய்திகள்