உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா: நூஹ் மாவட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்த 24 மணி நேர தடை

ஹரியானா: நூஹ் மாவட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்த 24 மணி நேர தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை போல் மீண்டும் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூஹ் மாவட்டத்தில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் வரையில் காயம் அடைந்தனர். தொடர்ந்து அன்றைய தினம் இரவில் குருகிராமில் உள்ள மசூதியை தாக்கியதுடன் அதன் இமாமை கொன்றது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்த பட்சம் ஆறுபேர் பலியானதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இச்சம்பவத்தின் முதல் ஆண்டை முன்னிட்டு மீண்டும் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நூஹ் மாவட்டத்தில் இன்று மாலை (21.07.2027) 6 மணி முதல் முதல் நாளை மாலை (22.07.2024) 6 மணி வரை இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அனுராக் ரஸ்தோகி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
ஜூலை 21, 2024 22:14

இப்படி தான் பண்ணனும். தேவையற்ற வதந்திகளை share பண்றதே பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கு.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:12

பெரும்பான்மையினர் அஞ்சி நடுங்கி வாழும் நிலை ..... ஆனா அவங்களை மோடி ஜி காப்பாத்துவாரு ...... இல்லீங்களா ????


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி