உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு உரிய தண்ணீரை ஹரியானா அரசு வழங்கும்

டில்லிக்கு உரிய தண்ணீரை ஹரியானா அரசு வழங்கும்

புதுடில்லி,:“ஒதுக்கப்பட்ட பங்கின்படி, டில்லிக்கு உரிய தண்ணீர் வழங்கப்படுமென ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உறுதியளித்தார்,” என, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்தார்.வரலாறு காணாத கோடைக்கு மத்தியில், தேசிய தலைநகர் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் யமுனை நதி நீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகரின் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஹரியானா பா.ஜ., அரசு தான் காரணமென, ஆளும் கட்சியான ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது. தண்ணீர் பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதை கண்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை மாநில ஆம் ஆத்மி அமைச்சர்கள் ஆதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் சந்தித்து, ஹரியானா அரசிடம் இருந்து டில்லிக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.அப்போது, அவர்களிடம், “குற்றச்சாட்டு விளையாட்டில் ஈடுபட வேண்டாம்,” என, கவர்னர் அறிவுறுத்தினார்.இந்த பிரச்னை தொடர்பாக, 'எக்ஸ்' என்ற சமூக வலைதளத்தின் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேற்று கவர்னர் வெளியிட்ட பதிவு:டில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், தேசியத் தலைநகருக்கு ஒதுக்கப்பட்ட பங்கின்படி தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.தற்போதைய வெப்ப அலையின் காரணமாக அங்கும் பிரச்னைகள் இருந்தபோதிலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். ஒதுக்கப்பட்ட பங்கின்படி டில்லிக்கு உரிய பங்கு தண்ணீர் வழங்கப்படுமென, ஹரியானா முதல்வர் உறுதி அளித்தார்.இவ்வாறு அந்தப் பதிவில் கவர்னர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ