உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாசன் அழைத்து சென்று பிரஜ்வலிடம் விசாரணை

ஹாசன் அழைத்து சென்று பிரஜ்வலிடம் விசாரணை

ஹாசன் : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, ஹாசனுக்கு அழைத்து சென்று, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வலை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று காவலில் எடுத்தனர்.பெங்களூரில் இருந்து ஹாசன் டவுன் ஆர்.சி., ரோட்டில் பிரஜ்வல் பயன்படுத்திய எம்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அந்த வீட்டில் வைத்து, பிரஜ்வலிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த அலுவலகத்தில் வைத்து பிரஜ்வல், தன்னை பலாத்காரம் செய்ததாக, ம.ஜ.த., பெண் பிரமுகர் புகார் அளித்திருந்ததால், அங்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.விசாரணை முடிந்ததும் பிரஜ்வல் மீண்டும் பெங்களூரு எஸ்.ஐ.டி., அலுவலகம் அழைத்து செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை