மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
புதுடில்லி:மாநிலத்தில் முதியோர் இல்லங்கள் கட்டுவதற்காக முதியோரின் எண்ணிக்கையை கண்டறிய வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை முடிவு செய்யுமாறு, மாநில தலைமைச் செயலருக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தங்கள் சொந்த குடும்பத்தினரால் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. பாரபட்சம் காட்டப்படுவதால் பல குடும்பங்களில் மூத்த குடிமக்கள் துயரத்திற்குள்ளாகின்றனர். அன்பு, பாசம், பராமரிப்பு இல்லாமல் தவிக்கும் முதியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இத்தகைய முதியோரை கவனிக்கும் வகையில் சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசின் துறைகளை சலேக் சந்த் ஜெயின் என்பவர் அணுகினார். மாநில அரசின் கதவுகளை பல முறை தட்டியும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை.இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகினார். தன்னுடைய மனுவில் அவர் கூறியிருப்பதாவது:மூத்த குடிமக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் குறித்த தரவுகளை தனியாக பராமரிக்கும்படி, டில்லி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். மாவட்டங்கள் தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ்.அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் முன்வைத்த வாதம்:டில்லியின் பிந்தாபூரில் தனியார் - பொது கூட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் முதியோர் இல்லம், லம்பூரில் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லம் என, இரண்டு முதியோர் இல்லங்கள் மட்டுமே உள்ளன. இந்த இல்லம், நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தால் நடத்தப்படுகிறது.இவை தவிர வேறெந்த முதியோர் இல்லமும் மாநிலத்தில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, மனுவை தள்ளுபடி செய்வதற்கு முன் பிறப்பித்த உத்தரவு:நகரில் உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கையை கண்டறிய வீடு வீடாகச் சென்று மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறையை மாநில தலைமைச் செயலர் 12 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும்.மாவட்டங்கள் தோறும் முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்.இவ்வாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2