உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டு வசதி திட்டத்தில் ஊழல்: மாஜி முதல்வர் ஜெகனுக்கு சிக்கல்

வீட்டு வசதி திட்டத்தில் ஊழல்: மாஜி முதல்வர் ஜெகனுக்கு சிக்கல்

ஐதராபாத்: ஆந்திராவில் புலிவெந்துலா வீட்டுவசதி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக விசாரணைகுழு அமைத்து தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். முந்தைய ஓய்.எஸ்.ஆர்., காங்.,கட்சி முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் புலிவெந்துலா வீட்டு வசதி திட்டத்தில் வீட்டு மனைகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக விசாரணை குழு அமைத்து அறிக்கை தர தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த தொகுதி புலி வெந்துலா என்பதால் அவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அபுசாமி
ஜூலை 07, 2024 12:32

இவர் ஆட்சிக்கு வந்தால் அவரோட ஊழல் மட்டும் வெளியே வரும். அவர் ஆட்சிக்கு வந்தால் இவரோட ஊழலெல்லாம் வெளியே வரும். ரெப்டு பார்ட்டியும் ஊழல் பார்ட்டிதான்.


Palanisamy Sekar
ஜூலை 07, 2024 04:30

அரசியல் என்பது பழிதீர்க்கும் இடமல்ல என்பதை அவருக்கும் புரியவைக்க வேண்டும். இப்போது வசமாக அணைத்து ஊழல்களிலும் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கின்றார். இறக்குமதி செய்யப்பட மதத்தை திணிக்க தன்னால் ஆனவரை இந்துக்கோவில்களில் நியமனம் செய்து இந்துக்களின் மனம் நோக செய்த அவருக்கு இறைவனே பார்த்து கொடுக்கும் தண்டனை இது.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:27

கண்டமேனிக்கு விளையாடியதில் இவர் 1 என்றுதான் சொல்லவேண்டும். மதம் மாறிவிட்டால் இவர்களுக்கு பில்லியன்களில் வெளிநாட்டுப்பணம் ஏதாவது ஒருவகையில் வந்து விடுகிறது. இல்லை என்றால் மதசார்பற்ற சின்னவர், வைக்கோ போன்றோர் கூட மதம் மாற வேண்டிய அவசியமில்லை.


மேலும் செய்திகள்