உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேணுகாசாமி கொலை வழக்கு சிக்கண்ணா தப்பியது எப்படி?

ரேணுகாசாமி கொலை வழக்கு சிக்கண்ணா தப்பியது எப்படி?

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்காமல், நடிகர் சிக்கண்ணா அதிர்ஷ்டவசமாக தப்பியது எப்படி என்று தெரியவந்து உள்ளது.சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா, தொழில் அதிபர் பிரதோஷ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக ஒவ்வொரு நாளும் புது தகவல் வெளிவருகிறது.இந்த கொலை வழக்கில் சிக்காமல், நடிகர் சிக்கண்ணா தப்பியது தற்போது தெரியவந்து உள்ளது. ரேணுகாசாமி கடந்த மாதம் 8ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் மதியம் ஆர்.ஆர்., நகரில் உள்ள பப்பில் நடந்த பார்ட்டியில் தர்ஷன், சிக்கண்ணா, பிரதோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, ரேணுகாசாமியை சித்ரதுர்காவிலிருந்து, பெங்களூரு அழைத்து வந்த தகவல் தர்ஷனுக்கு கிடைத்தது. இதனால் அவர் தனக்கு சொந்த வேலை இருப்பதாக, பார்ட்டியில் ஈடுபட்டோரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.அப்போது சிக்கண்ணாவிடம், 'என்னுடன் வருகிறாயா' என்று கேட்டுள்ளார். ஆனால் அவர், தனக்கு வேறு வேலை இருப்பதால் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனால் அவரை விட்டுவிட்டு தர்ஷன் புறப்பட்டு உள்ளார். அப்போது காரின் அருகே வந்த பிரதோஷ், 'நான் உங்களுடன் வருகிறேன்' என தர்ஷனிடம் கூறியுள்ளார். அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஆனாலும் பிரதோஷ் அடம் பிடித்து தர்ஷனுடன் சென்று, கொலை வழக்கில் சிக்கியது தெரியவந்துள்ளது. ஒருவேளை சிக்கண்ணா சென்று இருந்தால், அவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ