உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி

மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? என தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது: மஹாராஷ்டிரா அரசின் தரவுப்படி, மாநிலத்தில் 9.54 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் 39 லட்சம் வாக்காளர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர்? வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையான வாக்காளர்களை விட அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்? இந்த வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்களுக்கு வாக்காளர் பட்டியல் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். இது குறித்து தேர்தல் கமிஷன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார். ராகுலின் குற்றச்சாட்டை மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நிராகரித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் கமிஷன் ஏற்கனவே திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ராகுல் தொடர்ந்து பொய்களை கூறி, தன்னை ஆறுதல் படுத்திக் கொள்கிறார். இது தொடர்ந்தால், காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

எவர்கிங்
பிப் 08, 2025 14:37

கூமுட்டை எப்படி குட்டி போட்டதோ அப்புடி


எவர்கிங்
பிப் 08, 2025 14:35

இத்தாலிய ரோஙிகியாமக்கள் இங்கே குடியேறிய தால் இந்த நிலை


RAMAKRISHNAN NATESAN
பிப் 07, 2025 21:13

ராகுலுக்கு முட்டுக்கொடுப்பவர்கள் அவர் குற்றச்சாட்டை எங்கு வைக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும் ......


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 20:04

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ராகுல் எவ்வளவு வேணும்னாலும் பொய் சொல்லி கொண்டு தன்னை தானே ஆற்றிக்கொண்டே இருக்க வேண்டியது தான். ஜெயிக்க வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை.


samvijayv
பிப் 07, 2025 19:07

ஒருவேளை இதற்கு முன்பு அனைத்து தேர்தகளிலும் நம்ம கையாண்டதை காங்கிரஸ் போல் இன்று பிஜேபி-யும் அதை கையாளுகிறார்களா., என்று பப்பு ஜி சந்தேகத்துடன் கேட்கின்றார்.


என்றும் இந்தியன்
பிப் 07, 2025 18:38

மஹாராஷ்ட்ரா 12,86,59,000 மக்கள்தொகை- 2025ல் 2024ல் வோட்டு போட தகுதியானவர்கள் 8,85,64,748 வோட்டு போட்டவர்கள் 5,38,38,389 2011ல் வோட்டு போட தகுதியானவர்கள் 8,15,05,879 இதை வைத்துக்கொண்டு தான் பப்பு தி கிரேட் இந்த உளறு.. உளறுது .இதை கேட்கும்மக்கள் என்ன சொல்வார்கள் அவரை நம்பி ஏதோ கோல்மால் நடக்குது என்று எண்ணுவார்கள் .


sankaranarayanan
பிப் 07, 2025 18:14

கொலம்பஸ்சுக்கு அப்புறம் கண்டுபிடிப்பதில் பப்புதானைய்யா சிறந்தவர் என்ன மூளை இவர்க்கு எப்படி இதை கண்டுபிடித்தார் இவருக்கு தேசிய விருது கொடுக்கலாமே


V.Mohan
பிப் 07, 2025 18:10

மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்கிற மாதிரி சொல்லாதீங்க... வாக்காளர்கள் அதிகம் என்றால் உங்களுக்கு யார் சொன்னது? எந்த ஆதாரத்தில் வந்த செய்தி?? நீங்கள் எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்து கொண்டு பொய்புகார் கூறாமல், வாக்காளர் லிஸ்ட ,சேர்ப்புக்கு முன்& சேர்ப்பிற்கு பின் என இரு லிஸ்ட் கேளுங்க, செக் பண்ணி தவறு இருந்தா கேளுங்க...சும்மா தேவை இல்லாம சவுண்ட் விடாதீங்க...


Madhavan
பிப் 07, 2025 18:05

தேர்தல் கமிஷன் இறுதி வரைவ்ய் வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கும், பொது வெளியிலும் வைக்கிறதே.... மேலும் தேர்தலில் ஓட்டு போடத் தகுதியானவர்கள் வாக்காளர் பூத் ஸ்லிப் அடிப்படியில் மட்டுமல்லாது வேறு சில தரவுகளின் அடிப்படையிலும் அனுமதிக்கிறது. மேலும் லோக் சபா தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் 18 வயதைக் கடந்தவர்கள், ஓட்டுப் போடத் தகுதி வாய்ந்தவர்கள் அதிகரித்து இருப்பார்கள் அல்லவா? இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொது வெளியில் தேர்தல் கமிஷன் மீது குற்றம் சுமத்தினால், தேர்தல் கமிஷன் இவர் மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க‌ வேண்டும்.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 07, 2025 17:54

உங்கள மாதிரி ஆளுங்க இங்கே மக்கள் தொகை பெருக்கிட்டு அப்புறம் இத்தாலிக்கு போயி ஓட்டுபோடுன்னா இப்படித்தான் கணக்கு சரியாய் வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை