உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு ?

இன்னும் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு ?

புதுடில்லி: ரூ. 7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசவர் வங்கி நேற்று அறிவித்துள்ளது.புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது போது பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடியாக இருந்தது.இந்நிலையில் கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அறிவித்தது.நேற்று (செப்.03) ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஆக.30-ம் தேதிய நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்திலிருந்த 2000 நோட்டுகளில் 97.96 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

karunamoorthi Karuna
செப் 03, 2024 09:13

சாதாரண பொது மக்கள் எதற்காக 2000 ரூ நோட்டுகளை வைத்து இருப்பார்கள் பணக்கார ஊழல் திருட்டு பொது மக்களிடம் தான் இருக்கும்


சந்திரசேகர்
செப் 03, 2024 06:06

அந்த மீதி பணம் திரும்ப வராது. அதுக்கு ரெக்கை முளைத்து வெளிநாட்டுக்கு பறந்து போயிடுச்சு


Kasimani Baskaran
செப் 03, 2024 05:45

முன்னரெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமாக செல்லாது என்று அறிவித்து விட்டு ஒன்றும் செய்ய மாட்டார்கள். இந்த முறை பணத்தை மாற்றலாம் என்று சொல்லியும் கூட மாற்றல் இருக்கிறார்கள் என்றால் அந்தப்பணம் வரி செலுத்தி சம்பாதித்தது கிடையாது என்பது உறுதி. ஆகவே இது பற்றி பல தேர்தல்கள் முடிந்த பின்னரும் உருட்டுவது கீழ்த்தரமானது.


N Sasikumar Yadhav
செப் 03, 2024 14:22

உங்கள மாதிரி கோபாலபுர ஆதரவு ஆட்களை சோதனையிட்டால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது RBI க்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம் முரசொலியை தாண்டி யோசிக்க பழகுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை