| ADDED : மே 29, 2024 04:21 AM
பெலகாவி, : எருமை விற்ற பணத்தை குடித்துவிட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்டார்.பெலகாவியின் முதலகி புலகாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பா, 41; விவசாயி. இவரது மனைவி எல்லவ்வா, 40. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.குடும்ப வறுமை காரணமாக, வீட்டில் வளர்ந்து வந்த எருமை மாட்டை, நேற்று முன்தினம் அன்னப்பா விற்றார். அதில் கிடைத்த பணத்தில் மது அருந்திவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தார்.இதனால் மனைவி கண்டித்தார். இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அன்னப்பா, எல்லவ்வாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வெளியே சென்றிருந்த மகன்கள், வீட்டிற்கு வந்தபோது, தாயை கொன்று தந்தை தற்கொலை செய்தது தெரிந்தது. முதலகி போலீசார் விசாரிக்கின்றனர்.