மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
குடகு: மொபைல் போனில் பேசியதற்காக மனைவியை கணவர் சுட்டுக் கொன்றார். துப்பாக்கியுடன் அவர் போலீசில் சரண் அடைந்தார்.குடகு, மடிகேரியின் விராஜ்பேட்டை புறநகரில் உள்ள பேடோளி கிராமத்தில் வசிப்பவர் போப்பண்ணா, 43. இவரது மனைவி ஷில்பா சீதம்மா, 38. இவர், முன்னாள் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர். 2012 முதல் 2017 வரை பேடோளி கிராம பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்துள்ளார்.சில நாட்களாக குடும்ப பிரச்னையால், தம்பதியிடையே தகராறு நடந்து வந்தது. அவ்வப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடக்கும். மனைவி எப்போதும் மொபைல் போனில் பேசுவதும், கணவருக்கு பிடிக்கவில்லை.ஷில்பா சீதம்மா, நேற்று காலை யாருடனோ, நீண்ட நேரம் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கணவர் போப்பண்ணா கண்டித்தார். இதனால் தம்பதி இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது.கோபமடைந்த போப்பண்ணா, துப்பாக்கியால் மனைவி ஷில்பா சீதம்மாவை சுட்டுக் கொலை செய்தார். பின் துப்பாக்கியுடன் விராஜ்பேட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசாரும் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்.பி., ராமராஜன், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago