| ADDED : மே 04, 2024 11:07 PM
பாகல்கோட்,: ''நான் முதலில் இந்தியன், அதன் பின்னரே கன்னடர், பிறகு முஸ்லிம்,'' என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமிர் அகமது கான் தெரிவித்தார்.பாகல்கோட் காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா பாட்டீலுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் ஜமிர் அகமது கான் பேசியதாவது:அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், நாங்கள் இங்கு இருந்திருக்க மாட்டோம். தற்போதைய நிலையை வழங்கிய அம்பேத்கரை நினைவு கொள்வது அவசியம். மாநாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருப்பதால், உருதுவில் பேசுகிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் முதலில் இந்தியன், பின்னர் கன்னடர், அதன் பின்னரே முஸ்லிம்.இவ்வாறு அவர் பேசினார்.