உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் :மெகபூபா

எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் :மெகபூபா

ஸ்ரீநகர்: எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால், கூட்டணிக்கு வரலாம் என காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுக்கு மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி தலைவர் மெகபூபா முப்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு செப். 18, செப்.25., அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இம்மாநிலத்தில் பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சி, தேசிய காங், கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளன.இந்நிலையில் மற்றொரு மாநில கட்சியான மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி 90 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.இது குறித்து கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார், அதில் பி.டி.பி. கட்சி ஆட்சிக்கு வந்தால், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்., கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் உயர்த்தப்படும். பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்றார். கூட்டணி குறித்து கேட்டதற்கு , தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும், தொகுதி பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எங்கள் அஜென்டாவை ஏற்றுக்கொண்டால், இரு கட்சிகளும் கூட்டணியில் இணையலாம்.என்னைப் பொறுத்தவரை, காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதே முக்கியம். எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

gvr
ஆக 24, 2024 22:40

All cheats looking to loot India.


Manickam Ela
ஆக 24, 2024 22:38

வாக்காளர் களே எஜமானர்கள். வாக்களித்த பின். அப்பாவிகள்


Ramesh
ஆக 24, 2024 22:03

முஸ்லிம்கள் நாட்டை சீரழிப்பதற்க்கு இந்த சண்டாள சதிகாரர்களுக்குத்தான் ஓட்டு போடுவர்


Rpalnivelu
ஆக 24, 2024 21:32

இந்த மக்கள் திருட்டு கான் காங்கிரசாலும் மற்றும் ஊழல் குடும்ப கட்சிகளாலும் மயக்கப்பட்டு பிரிவினைவாத மயக்கத்தில் இருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த தேர்தல் சரிப்படுமா என்று தெரியவில்லை. மக்கள் தெளியும் வரை இங்கு எலக்ஷன் தேவையில்லை


A good
ஆக 25, 2024 08:00

இவர்கள் சொல்வதை ஏற்று கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் காஷ்மீர். சிந்தித்து செயல் படுங்கள் யாராக இருந்தாலும்.


ஆரூர் ரங்
ஆக 24, 2024 21:05

மூர்க்த்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.


sankar
ஆக 24, 2024 20:21

எலக்சன் என்கிற கருமமே வேண்டாம் - இவர்களில் யார் பதவிக்கு வந்தாலும் - மாநிலத்தை சூறையாடி விடுவார்கள் - பிறகு முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்


gmm
ஆக 24, 2024 20:15

காஷ்மீரில் பிரச்சனை ஒன்றும் இல்லை. சலுகைகள் அதிகம் உள்ளது. சிறுபான்மை மத வழக்கப்படி, தன் மதம் சார்ந்தால் மட்டும் உதவி. இலவச மின்சாரம் இழப்பிற்கு வேறு வழியில் ஈடு செய்து ஆக வேண்டும். பழைய ஓய்வு ஊதியம். நிதி ஆதாரம்? இனி மாநில அரசு ஊழியர்கள் பணி ஆயுள் 5 ஆண்டுகள். ஆட்சியை பிடித்த பின் 370 சட்டவிரோத பிரிவு தாக்கல், மாநில அந்தஸ்து கோரிக்கை, நில உரிமை, இட ஒதுக்கீடு, தேசிய இணைப்பு மொழி போன்றவை காஸ்மீர் மக்கள் விருப்பம் என்று பிதற்றுவது. சர்வதேச, அரசியல் சாசனம் வலுத்தவருக்கு வளைந்து கொடுப்பது. நின்றால் தான் தீர்வு.


Ramesh Sargam
ஆக 24, 2024 20:14

அது என்ன எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீட்டெடுக்கவேண்டும்? பாக்கிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகளை நம் நாட்டுக்குள் விடுவதா...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை