உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரி நீர் வேண்டுமானால் ஓட்டு போடுங்கள்: சிவகுமார்

காவிரி நீர் வேண்டுமானால் ஓட்டு போடுங்கள்: சிவகுமார்

பெங்களூரு, : ''காவிரி தண்ணீர் வேண்டும் என்றால், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷுக்கு ஓட்டு போடுங்கள்,'' என, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை, துணை முதல்வர் சிவகுமார் மிரட்டி உள்ளார்.பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், துணை முதல்வர் சிவகுமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த குடியிருப்பில் 2,510 வீடுகள் உள்ளன; அதில் 6,424 ஓட்டுகள் உள்ளன. உங்களுக்கு காவிரி நீர் தேவைப்படுகிறது. காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்றால், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை வெற்றி பெற செய்யுங்கள்.நான் துணை முதல்வராக உள்ளேன். பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்பாசனத்துறை என்னிடம் உள்ளது. உங்கள் பிரச்னைக்கு முதல்வர் வீட்டிற்கு செல்ல வேண்டாம். என் வீட்டிற்கு வாருங்கள். நான் உதவி செய்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.சிவகுமார் பேசிய வீடியோவை, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட பா.ஜ., 'காவிரி நீர் வேண்டும் என்றால், எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என, அடுக்குமாடி குடியிருப்பாளர்களை துணை முதல்வர் மிரட்டுகிறார். சகோதரர்களின் போக்கிரிதனம் நாளுக்கு, நாள் அதிகரித்து உள்ளது. இவர்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி, தொகுதி மக்கள் ஆணி அடிப்பர்' என, கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ayyappan Chidambaram
ஏப் 19, 2024 11:57

ஜனநாயகத்தை காக்க, ஒரு ஆள் அலைகிறாரே


Ravichandran S
ஏப் 19, 2024 07:49

கர்நாடகத்தில் அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் கேட்கின்றனர் இங்கே மக்கள் எக்கேடு கெட்டு போகட்டும் என உள்ளனர்


GoK
ஏப் 18, 2024 20:07

கடந்த அறுபது ஆண்டுகளில் திருட்டு திராவிட கழகங்கள் ஆட்சியில் தூங்கி கொண்டிருந்தபோது கர்நாடகம் காவேரி தொடங்கும் இடத்துக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் இடைப்பட்ட தூரத்தில் ஒரு அஞ்சு ஆறு சிறுசிறு அணைகளை கட்டியது இப்போது கூவுவதில் என்ன பயன்


K. Mani
ஏப் 18, 2024 12:40

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மக்கள் காங்கிரஸ்க்கு வோட்டு போடக்கூடாது


veeramani
ஏப் 18, 2024 09:23

ஒரு மய்ய ஆரசின் விஞ்ஞானியின் கூற்று கர்நாடக அரசு காவிரியில் மேகதாது பகுதியில் ஆணை கட்டிக்கொள்ள தமிழகம் ஒரு கண்டிஷன் பேரில் அனுமதி தரலாம் தமிழ்நாடு அரசும் ஊட்டி அருகில் கபினி ஆருக்கு செல்லும் நதியில் ஒரு அணைகட்ட அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டும் மேலும் பாவ னி முற்றிலும் ஒரு அணைக்கட்டுவதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் இதனால் தமிழகத்திற்கு திருப்பூர், பொள்ளாச்சி, பழனி பகுதி அளவில் தண்ணீர் எந்த காலத்திலும் கிடைக்கும்


thangavel
ஏப் 18, 2024 09:08

thanneer vasathi seithu tharuvom endruthaane solkirar nanba idhil enna thavaru kandai


Ramesh Sargam
ஏப் 18, 2024 09:05

மொதல்ல காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வரவேண்டுமென்றால், நீ சிறந்த, ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்கப்பார் இன்றைய தேதிக்கு காவிரி ஆற்றிலே தண்ணீர் இல்லை இவர் காவிரி நீர் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போடணுமாம் பேத்தலான பேச்சு திமிர் பிடித்த பேச்சு


Gopal
ஏப் 18, 2024 06:46

இந்த மாதிரி உருட்டி மிரட்டி ஓட்டு வாங்கத்தான் தெரியும் இந்த காங்கிரஸ் வந்தீரோகளுக்கு


raja
ஏப் 18, 2024 06:15

பார்த்தாயா தமிழா அவன் மக்களிடமே பிளாக் மெயில் பண்ணுகிறான் அப்போ காவேரியில் நீர் இருக்கிறது இல்லை என்று நாடகம் ஆடுகிரானுவோதிருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடன் எதும் பேசாமல் இருப்பதால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்க படுகிறார்கள்


மேலும் செய்திகள்