உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்பன் உமிழ்வு இல்லா விமான நிலையம் முதலில் இலக்கை எட்டியது ஐ.ஜி.ஐ.ஏ.,

கார்பன் உமிழ்வு இல்லா விமான நிலையம் முதலில் இலக்கை எட்டியது ஐ.ஜி.ஐ.ஏ.,

மஹிபால்பூர்:டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நாட்டிலேயே முதன்முறையாக கார்பன் உமிழ்வு இல்லாத விமான நிலையம் என்ற பெருமை கிடைத்துள்ளது.டில்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் 2030க்குள் கார்பன் உமிழ்வு இல்லா விமான நிலையமாக மாற்றுவது என்ற இலக்குடன் அனைத்து விமான நிலைய நிர்வாகங்களும் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் சர்வதேச ஏர்போர்ட் கவுன்சிலின் கார்பன் இல்லா விமான நிலையத்திட்டத்தின் கீழ் டில்லி விமான நிலையம் பல்வேறு நடவடிக்கை எடுத்தது.இதனால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், கார்பன் உமிழ்வு இல்லாத விமான நிலையம் என்ற சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. நிலை 5 என்ற சான்றிதழ் இந்த விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த சாதனையை எட்டியுள்ள இந்தியாவின் முதல் விமான நிலையம் இதுதான்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கார்பன் உமிழ்வு இல்லா விமான நிலையம் என்ற இலக்கை எட்டுவதற்கு ஐந்து நிலைகள் உள்ளன. இந்திரா காந்தி விமான நிலையம், ஐந்தாவது நிலையை தற்போது எட்டியுள்ளது. இதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அதாவது 90 சதவீத கார்பன் உமிழ்வை இந்த விமான நிலையம் குறைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி