மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
தங்கவயல்: துாய வெற்றி அன்னை தேவாலயத்தின் 125ம் ஆண்டு விழா, கொட்டும் மழையில் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சாம்பியன் ரீப் ரயில் நிலையம் பின்புறம் உள்ள துாய வெற்றி அன்னை தேவாலய வருடாந்திர பங்கு பெருவிழா நேற்று துவங்கியது. ஆலய வளாகத்தில் ஜெபமாலை பவனியுடன், வெற்றியன்னை தேர் எடுத்து வந்தனர். பின், வேலுார் மறை மாவட்ட அருட்தந்தை அக்டோவியஸ், அன்னை கொடியை ஏற்றினார். இம்மாதம் 14ம் தேதி வரை, தினமும் காலையில் 7:00 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் திருப்பலி, வெற்றியன்னையின் பழைய ஆலயத்தில் நடக்கும்.விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு அருட் தந்தைகள் மறையுரை வழங்குவர். வரும் 11ம் தேதி காலை 6:30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 7:30, 9:00, மாலை 5:30 மணிக்கு தமிழில் திருப்பலி, காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை, ஆலய சிறுவர்களுக்கு ஞான உபதேச வகுப்புகள் நடக்கும்.ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெற்றியன்னை ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6:30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 8:00 மணி, 9:30 மணிக்கு தமிழில் திருப்பலி; திருப்பயணியருக்காக காலை 11:00 மணிக்கு தமிழில் சிறப்பு திருப்பலி; மாலை 3:00 மணியளவில் கில்பர்ட்ஸ் சதுக்கத்தில் இருந்து அன்னையின் அலங்கார தேர் பவனி துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு தமிழில் திருப்பலி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை கில்பர்ட் ராஜ், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.துாய வெற்றி அன்னை தேவாலய 125ம் ஆண்டு பெருவிழா, கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இடம்: சாம்பியன் ரீப், தங்கவயல்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
6 hour(s) ago