உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தின கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தின கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.டில்லி, செங்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 15) 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11ம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=excuq4hs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சாகச நிகழ்ச்சிகள்

முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு

சுதந்திர தினம் முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும்

நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்று விழா உற்சாகமாக நடந்தது. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.

மோடி வாழ்த்து

இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்! என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, அவர் டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அமெரிக்கா வாழ்த்து

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அமெரிக்கா சார்பில், சுதந்திர தின வாழ்த்துக்கள். அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது. காலநிலை முதல் விண்வெளி தொழில்நுட்பம் வரை இருதரப்பு உறவு முன்பை விட மிகவும் வலுவானது என்றார்.

ஜொலித்தன அரசு கட்டடங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பல அரசு அலுவலக கட்டடங்கள் இந்திய தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஒளிரச் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jaya Kumari
ஆக 17, 2024 20:32

நான் பேசியே பல கருத்துகள் தவறான புரிதல் தான் நடந்துகொண்டிருக்கிறது ஏனென்றால் பல விவாதங்கள் பல தோல்விகள் பல போராட்டம் பல குழப்பம் நான் பெரியவனா நான் சின்னவனா இப்படி இருக்கு ஆனால் ஒரு விஷயம்தான் மக்கள் வாழ்வு பெற மனிதவளம் பெருகிக்கொண்டேபோகிறது ஆகையால் நாடு செழிக்கவேண்டும் பாதுகாப்பு வளம்பெற வேண்டும் ஒரு பெண் நடு இரவில் தணியாக வந்தாலும் பத்து பெண்களோடு வந்தாலும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறலாம் பாதுகாப்பு என்பது நம்நாட்டு சொத்து மனிதன் வாழ்வு ஒன்றை ஒண்று மாறாமல் சுயநலம் இல்லாமல் பணம் சிதைக்காமல் நல்ல பங்கை தெரிந்தவர்களாக வாழ்க்கை துன்பங்களை சகித்து வாழ வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். பத்து மாதம் சுமந்து தாய்க்கு எப்படி சுமைகளை தாங்கி கொண்டிருப்பது போல் நம்முடைய தெய்வ நம்பிக்கையிலும் நம்முடைய முற்பிதாக்கள்செய்த நன்மைகள் தான் அதிகம் ஆகையால் வாழக்கூடிய வழிமுறைகள்கடைபிடித்து அறநெறிகளைகற்றுகொண்டு வாழதாத்தாகாந்தி மாமா நேரு போன்றோர்கள் வாழ்ந்ததால் மதிப்பு மரியாதை நம்நாடு என்றென்றும் வாழ துணைபுரிய இறைவன் என்றும் நிலை பெறவேண்டும் நன்றி


Mr Krish Tamilnadu
ஆக 15, 2024 10:35

நம்மை நாமே வழிநடத்தும் ஐனநாயக வழிமுறை. நம்மவர்களை கேவலமாக நினைத்தவர்களை விரட்டி, எங்களை நாங்களே பார்த்து கொள்கிறோம் என பயணிக்க ஆரம்பித்த நன்னாள். வாழ்க ஜனநாயகம். வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.


பிரேம்ஜி
ஆக 15, 2024 08:36

போட்டோ நல்லாயிருக்கும்!


Priyan Vadanad
ஆக 15, 2024 08:14

ஐயா போட்டா நல்லா இருக்கு.


hari
ஆக 15, 2024 14:06

போட்டோ நல்ல இல்லையா


மேலும் செய்திகள்







புதிய வீடியோ