உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ராகுல், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ராகுல், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டியா கூட்டணி'' கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று([ஜூன் 01) டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில், இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. இன்று (ஜூன் 01) ஏழாவது கட்ட தேர்தலும், 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், இன்று (ஜூன் 1) கூடி ஆலோசனை நடத்தினர். டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், சரத்பவார், சீதாராம் யெச்சூரி, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Subbu
ஜூன் 05, 2024 13:26

உங்கள் மேல் உள்ள குறை தெரியாமல் அடுத்தவரைபற்றி குறை சொல்பவர் விரைவில் காணாமல்போவார்கள்.


Sbnagarajan 42kkst South St Aruppukottai
ஜூன் 02, 2024 06:24

விடியாத விடியலை நோக்கி பயணம்


cbonf
ஜூன் 01, 2024 23:17

தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறுவது என்று ஆலோசனை செய்வார்கள்.


theruvasagan
ஜூன் 01, 2024 22:48

இந்த கூட்டமே ஒரு வெட்டி வேலைன்னு முன்னாடியே தெரிந்து.கொண்டு மம்மு பேகம்.ஜகா வாங்கிடுச்சு. விடியலுக்குத்தான் லேட்டா தெரிஞ்சிருக்கு.


பாரதி
ஜூன் 01, 2024 22:02

போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டும் நல்லா ஒற்றுமையா உட்கார்ந்து இருக்காங்க அருமை இது போதும் எல்லாரும் எழுந்திருச்சு கலைந்து போங்க


sankaranarayanan
ஜூன் 01, 2024 21:31

இந்த கூட்டத்தில் திராவிடத்திலிருந்து யாருமே கலந்து கொள்ளவில்லையா ஏன் இப்படி பின் வாங்கல்


RAJ
ஜூன் 01, 2024 20:14

அந்த பெரிய ரூமை பெர்மனெண்டா அப்டியா மூடிட்டிங்கனா.. .. பெருச்சாலிங்க தொல்லை நாட்ல இருந்து போய்டும்... முடிஞ்சா சிமெண்ட் போட்டு கவர் பண்ணிடுங்க காடகு போகமா. இன்னும் ஒரு ரெண்டு இல்ல மூணு வெளில திரியுது.. .. அத வேட்டைக்காரன் . பார்த்துக்கிடுவார்..


theruvasagan
ஜூன் 01, 2024 19:20

ஆலோசனை கூட்டம் கூடினப்ப ஒரே கலகலப்பு கிளுகிளுப்பு. கூட்டம் முடியறப்ப கலகலத்துப் போயிருச்சே. ஐயோ பாவம். காலை நிலவரம் மாலைக்குள்ள கலவரமாயிடுச்சே.


Kumar Kumzi
ஜூன் 01, 2024 18:14

கடைசி சந்திப்பு அனைவரும் பிரியாணி சாப்பிட்டு ஊருக்கு கெளம்புங்கோ பாய் பாய்


R Kay
ஜூன் 01, 2024 18:14

உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என கட்டி கதறி ஒப்பாரி வைக்க rehearsal செய்கிறார்களோ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை