உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வியட்நாமுக்கு ரூ.2500 கோடி கடனுதவி வழங்குகிறது இந்தியா

வியட்நாமுக்கு ரூ.2500 கோடி கடனுதவி வழங்குகிறது இந்தியா

புதுடில்லி: ''இந்தியா வளர்ச்சியை ஆதரிக்கிறது, எல்லையை விரிவுபடுத்துவதை அல்ல,'' என, வியட்நாம் பிரதமர் பாம் மின்ஹ் சின்னிடம் தெரிவித்த பிரதமர் மோடி, அந்த நாட்டுக்கு 2,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது. அந்த நாட்டின் பிரதமர் பாம் மின்ஹ் சின் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது, ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், மூன்று ஒப்பந்தங்களுக்கான விரிவான ஆய்வும் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:கிழக்கு நாடுகளுடன் நெருக்கம் என்ற நம் கொள்கையிலும், வலுவான மற்றும் சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்கு பார்வையிலும், வியட்நாம் மிக முக்கிய நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்புகள் உள்ளன.நாம், 2047ல் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறோம். அதுபோல வியட்நாமும், தொலைநோக்கு பார்வை - 2045 என்ற இலக்குடன் பயணிக்கிறது. இருவரும் இணைந்து தங்களுடைய நாட்டின் வளர்ச்சியுடன், பரஸ்பர வளர்ச்சிக்கும் உதவுவோம்.இந்தியா எப்போதும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மற்ற நாடுகளை ஆக்கிரமித்து, தன் எல்லையை விரிவுபடுத்துவதை எதிர்க்கிறது. இந்த வகையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், அனைத்து நாடுகளும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய, வியட்நாமுடன் இணைந்து செயல்படுவோம்.வியட்நாமில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, 2,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவின் நிதியுதவியுடன், வியட்நாமில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மென்பொருள் பூங்காவை, இரு பிரதமர்களும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

makkalil oruvan
ஆக 02, 2024 17:03

அதானி வியட்நாமில் இரண்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக ஒரு செய்தி படித்தேன் ..... ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன்....???


பாமரன்
ஆக 02, 2024 13:56

இன்னாங்கயா காமெடி பண்றீங்க...


Ramesh Sargam
ஆக 02, 2024 11:38

ஆம், சீனாவும் இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவுகிறது. ஆனால் இலங்கை வளரவேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல, இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர.


P. SRINIVASALU
ஆக 02, 2024 10:13

தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டியது குடுக்கவக்கில்லை. வியட்னாமிக்கு உதவியாம். என்னகொடும


Ramesh Sargam
ஆக 02, 2024 12:49

கொடுத்ததை எல்லாம் அப்பன் கருணாநிதிக்கு சிலை வைக்கவும், மகன் உதய நிதியின் ஆசைக்காக மோட்டார் ரேஸ் நடத்தவும், கூவம் ஆற்றை சுத்தப்படுத்துகிறேன் என்றும் வீண் செலவு செய்கிறார். அதை தட்டி கேட்பீர்களா, சகோதரரே...?


RAMAKRISHNAN NATESAN
ஆக 02, 2024 09:41

வியட்நாமை விட அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம் தமிழகம் ..... அதுக்கு ஏன் நிவாரணம் என்கிற பெயரில் கொள்ளையடிக்க உதவக்கூடாது?? விஷயம் இதுதான்... வியட்நாம் ஆட்டயப்போட முடியாது. திரும்ப வரக்கூடிய தொகை... சீனாவை தீர்க்க அவர்களது உதவி நமக்குத் தேவை.....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை