உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவால்கள் அதிகம்; சாதித்தவையும் அதிகம்; சக்தி காந்ததாஸ் பெருமிதம்!

சவால்கள் அதிகம்; சாதித்தவையும் அதிகம்; சக்தி காந்ததாஸ் பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கோவிட் தொற்றுநோய், உக்ரைனில் போர், பல்வேறு நாடுகளில் நிலவும் பதட்டங்கள் உட்பட கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலகுக்கே முன்னுதாரணமாக உள்ளது,' என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டி: கடந்த ஆறு வருடங்களாக பொருளாதார வளர்ச்சி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கோவிட் காலத்தில் சரிந்த இந்திய பொருளாதாரம் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வேகமாக மீண்டெழுந்தது. போர் காரணமாக ரஷ்யா மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதாரத் தடையால் வர்த்தக ரீதியில் பல்வேறு சவால்கள் உருவானது.

நெருக்கடி

சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. கோவிட் காலத்தில், பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, நெருக்கடியிலும் ​​நிதித் துறை சிறப்பாக செயல்பட்டது. ரிசர்வ் வங்கியும் அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது.

பணவீக்கம்

இன்று பணவீக்கம் கட்டுக்குள் வருகிறது. ஆனால் 4 சதவீதத்தை எட்டுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். நிதித்துறை இன்று முன்பை விட, சிறப்பானதாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Barakat Ali
ஆக 21, 2024 16:24

பணமதிப்பிழப்பை அறிவிக்காமல் ஒதுங்கிக்கொண்டு அந்த வேலையையும் பிரதமருக்கு கொடுத்த சாதனைதான் என்னே .......


Sivagiri
ஆக 21, 2024 13:56

அய்யாவுக்கு ஒரு மினிஸ்டர் போஸ்ட் பார்சல் - -


இறைவி
ஆக 21, 2024 13:05

அவ்வப்போது பெயர்களை மாற்றிக் கொண்டு கருத்து போடும் உபிக்களே. பொய் சொன்னாலும் அதை நம்புமாறு சொல்லவேண்டும். உங்கள் கூற்றுப்படி 2014ல் இந்தியாவின் கடன் 392.2 பில்லியன் (அதாவது 39,220 கோடி) அமெரிக்கன் டாலர்கள். இன்று இந்தியாவின் கடன் 663.8 பில்லியன் (அதாவது 66,380 கோடி) அமெரிக்கன் டாலர்கள். உங்கள் கூற்றை உண்மை என்றே கொள்வோம். 2014ல் இந்தியாவின் GDP மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,04,000 கோடி அமெரிக்கன் டாலர்கள். அதாவது வருட வருமானத்தில் கடனின் அளவு 19.22% சதம். அதே 2024ல் இந்தியாவின் GDP மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,94,200 கோடி அமெரிக்கன் டாலர்கள். இதில் இந்தியாவின் கடன் 66,380 கோடி அமெரிக்கன் டாலர்கள் என்பது 16.84% சதம். இந்திய உள்நாட்டு உற்பத்தி ஏறக்குறைய இரு மடங்காக 93%சதம் உயர்ந்துள்ள போது கடன் மட்டும் 60% விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. இந்த சாதனையும் கொரோனா மற்றும் உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் யுத்தங்களுக்கிடையில் சாதிக்கப்பட்டது. உலகில் எந்த ஒரு நாடும் கடந்த 10 வருடங்களில் இப்படிப்பட்ட வளர்ச்சியை காணவில்லை. மற்ற நாடுகளின் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இப்படி எந்த புரிதல்களும் இல்லாமல் பொய்யான கருத்து போடுவது, குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்டுவது இல்லாமல் மக்களையும் முட்டாளாக வைத்திருக்கும் ஒரு முயற்சியே.


raja
ஆக 21, 2024 13:03

உலகின் சிறந்த ரிசர்வ் வங்கியாளராக "ஏ பிளஸ்" கிரேடு பெற்ற சக்தி காந்த தாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .


குரு, நெல்லை
ஆக 21, 2024 12:32

கொரோனா சமயத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நிதி நிலமை சீரடைய அற்புதமாக உழைத்து நாட்டினை நிதி நெருக்கடியில் இருந்து மீட்ட பெருமை இவருக்கு உண்டு. இங்கே குடித்துவிட்டு கும்மாளம் போட்டுகொண்டு விமர்சனம் என்ற பெயரில் அண்டி பிலைத்துகொண்டிருக்கும் மற்றவருக்கு இது புரியாது. தெரியாது. சும்மா சொல்லவேண்டும் என்ற காரணத்திற்காக கூச்சல் போடுவது இவர்களது வேலை. மற்ற நாடுகளின் நிலமை இவர்களுக்கு தெரியாது. பொருளாதாரம் புரியாது. கடன் வாங்கினாலும் மத்திய அரசு செய்த வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டால் புரியும். UPI payment பற்றி பழைய பொருளாதார புலி கூறியதை நினைவில் வைத்துகொண்டு பேசவும். இன்றைய நிலையில் நமது payment app மூலம் வளர்ந்த நாடுகளில் எளிதில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். புரிந்தால் சரி.


வைகுண்டேஸ்வரன்
ஆக 21, 2024 11:37

அவரே அவருக்கு அட்சதை போட்டுக்கறார். காமெடி. 2014 ல் இந்தியாவின் கடன் 392.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதே இந்தியாவின் கடன் 663.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது வளர்ச்சி என்று பிஜேபி ஆட்கள் மட்டும் சொல்லுவார்கள்.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 12:41

ஜிடிபி அதிகரித்து கடனை திரும்பச் செலுத்தும் திறன் அதிகரித்ததால்தான் மத்திய அரசுக்குக் கூடுதல் கடன் கிடைக்கிறது. (இலவசங்களை கொடுக்கவே கடன் வாங்குவது திமுக அரசு). உட்கட்டமைப்பு உருவாக்க எல்லா பெரிய நாடுகளும் கடன் வாங்குகின்றன. அது தவிர்க்க முடியாதது.


வைகுண்டேஸ்வரன்
ஆக 21, 2024 11:36

2014 ல் இந்தியாவின் கடன் 392.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதே இந்தியாவின் கடன் 663.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது வளர்ச்சி என்று பிஜேபி ஆட்கள் மட்டும் சொல்லுவார்கள்.


Kumar
ஆக 21, 2024 11:28

ஆரூர் ரங் இரண்டு ரூபாய் நல்ல வேலை செய்கிறார்


Hari
ஆக 22, 2024 05:35

Kumar is best upi kothadimai


veeramani
ஆக 21, 2024 10:34

எங்களது ஆர் பீ ஐ கவெர்னர் அவர்களுக்கு நமஸ்காரம் . தங்களின் நிதி அமைச்சக பணியிலும், இந்தியாவின் அச்சாணி போன்ற ஆர் பி ஐ பணியிலும் மிக மிக சிறப்பாக பணிசெய்து, இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் தாங்கள். உலகில் சிவப்புக்கொடி நாட்டின் எகானமி அதன் பாதாளத்திற்கு சென்றுகொண்டுள்ளபோதும், இந்திய எக்கனாமியை ஸ்டெடியாகி ஒரே மட்டத்தில் வைத்திருக்கிறீர்கள். இதற்கே இந்தியர்கள் உங்களை கொண்டாடவேண்டும். தாங்கள் உலக பாங்கிற்கேயே வழிகாட்டி, கலங்கரைவிளக்கம்


Sampath Kumar
ஆக 21, 2024 09:41

அதை நீக்கலே சொல்லிக்காதீங்க அசிங்கம்


ஆரூர் ரங்
ஆக 21, 2024 10:39

அசிங்கத்தைப் பத்தி 200 ம் 21ம் பக்கமும் பேசலாமா? விடியல் ஃபாரின் ஆட்கள் ஆலோசனைக் குழுவை அமைத்து மூன்று லட்சம் கோடி கூடுதல் கடன் வாங்கியது அசிங்க சாதனையில்லையா?


மேலும் செய்திகள்