உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்போசிஸ் வரி ஏய்ப்பு : மேலும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இன்போசிஸ் வரி ஏய்ப்பு : மேலும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.எஸ்.டி. வரி பாக்கி வைத்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து மேலும் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தன் வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்க, வெளிநாடுகளில் இன்போசிஸ் கிளைகளை துவங்கி ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், 32,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி பாக்கி செலுத்துமாறு இன்போசிஸ்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதையடுத்து மேலும் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி பாக்கிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிறுவனங்களுக்கு மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஆக 02, 2024 09:36

சித்து டேபிளுக்கு அடியில் சம்பாதிக்க சின்ன லெட்டர் அனுப்பியிருக்கிறார் அவ்வளவுதான். அந்தக் கம்பெனியில் பைசா பெயராது என்பது புரிந்து நோட்டீஸை வாபஸ் வாங்கிவிட்டார்.


இறைவி
ஆக 02, 2024 06:04

வரி விதிப்பை புரிந்து கொண்டு கருத்து பதிவிடவும். கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற நிலையினால்தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகள் இங்கு வளரவில்லை. இந்தியாவில் PhD ஆராய்ச்சிகள் குறைவதற்கு இந்த உடனடி எதிர்ப்பு மனநிலைதான் காரணம். நாம் வாங்கும் பொருள்களுக்கு GST undu என்பது தெரியும். ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் தயார் செய்யும்போது அங்கும் பொறியாளர்கள் வேலை செய்வார்கள். இங்கும் பொறியாளர்கள் வேலை செய்வார்கள். இம்மாதிரி வியாபாரங்களுக்கு GST உண்டா இல்லையா என்ற குழப்பமே காரணம். அதே வாடிக்கையாளர் இந்தியாவில் இருந்தால் GST குழப்பம் இல்லை. இன்ஃபோசிஸ் மட்டுமில்லாமல் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் இந்த குழப்ப பிடியில் சிக்கியுள்ளது. நோக்கியா சென்னையில் மூடப்பட்டதும் இம்மாதிரியான தமிழக அரசு ஓலையினால்தான்.


swega
ஆக 01, 2024 22:16

கணவனும் மனைவியும் பாரதத்தை முன்னேற்ற பிறந்தவர்கள் மாதிரி அக்கறையோடு பேசுவீர்களே நாராயணமூர்த்தி. அத்தனையும் நடிப்பா?


Iniyan
ஆக 01, 2024 23:02

அவர்கள் கட்டுப்பாட்டில் இன்போசிஸ் இல்லை இப்பொழுது. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் சொந்த கம்பெனியும் இல்லை.


Srinivasan Kalyan
ஆக 01, 2024 22:12

மிகவும் பெயர் பெற்ற பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டை உற்று நோக்கினால், மிகவும் வேதனையளிக்கிறது


மேலும் செய்திகள்