உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லிங்காயத்களுக்கு அநியாயம்? பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு!

லிங்காயத்களுக்கு அநியாயம்? பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு!

ஹூப்பள்ளி : “தார்வாட் தொகுதியில், லிங்காயத் தலைவர்களுக்கு எந்த அநியாயமும் நடக்கவில்லை. இது தொடர்பாக, திங்காலேஸ்வர சுவாமிகளிடம் பேசியுள்ளேன்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் டெங்கினகாயிதெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது: லிங்காயத் சமுதாயத்தினருக்கு, அநியாயம் நடந்துள்ளது. தார்வாட் தொகுதியில் பா.ஜ., வேட்பாளரை மாற்றும்படி, ஷிரஹட்டி மடத்தின் திங்காலேஸ்வரர் வலியுறுத்துகிறார். இது என் கவனத்துக்கும் வந்துள்ளது. நான் அவருடன் பேசியுள்ளேன்.தார்வாட் பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியால், யாருக்கும் அநியாயம் நடக்கவில்லை. இதற்கு முன்பு தார்வாட் மாவட்டத்தின், ஏழு தொகுதிகளில் லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இப்போதும் கூட நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அனைவரையும் ஜோஷி ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார்.திங்காலேஸ்வரர் சுவாமிகளுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கும். அரசியலில் ஒரே சமுதாயத்தினர் இருக்க கூடாது. அனைத்து சமுதாயத்தினரும் வர வேண்டும்.கோலார் தொகுதியில், காங்கிரசில் நடக்கும் நிலவரங்களை பார்த்துள்ளோம். மேலவை தலைவர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது, அனைவருக்கும் தெரியும். காங்கிரசில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. காங்கிரசில் ஒரு வீடு, மூன்று வாசல் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.முதல்வர் கோஷ்டி, துணை முதல்வர் கோஷ்டி, சதீஷ் ஜார்கிஹோளி கோஷ்டி என, பல கோஷ்டிகள் உள்ளன. லோக்சபா தேர்தல் நெருக்கத்தில், இந்த கட்சியில் பூசல் வெடித்து சிதறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை