உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சருடன் ஐ.என்.எஸ்.குழுவினர் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் ஐ.என்.எஸ்.குழுவினர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய செய்தித்தாள் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் சர்மா தலைமையிலான குழுவினர் நேற்று (21.08.2024) மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தனர்.அதில் செய்திதாளுக்கான 5 சதவீத சுங்க வரியை திரும்ப பெற வேண்டும். டிஜிட்டல் செய்திகள் சந்தாதாரர்கள் மீதான ஜிஎஸ்டி திரும்பப் பெறுதல், தணிக்கை செய்யப்பட்ட சான்றிதழ் சமர்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். அச்சு ஊடகம் மற்றும் வெளியீடு துறையின் நலனுக்காக எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 23, 2024 03:47

அதே போல் உண்மை செய்திகளை தான் வெளியிடுவோம், கான்ஸ்கேம் காங்கிரஸிடம் காசு வாங்கிக்கொண்டு பொய், வதந்தி செய்திகளை வெளியிடமாட்டோம் என்றும் உறுதிமொழி வாங்க வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ