உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, 2018 செப்டம்பரில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம். இதுவரை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், இத்திட்டத்தில் மக்கள் பயனடைந்துள்ளனர். 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும்' என, கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும். சமூக- - பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், இத்திட்டத்தின் பலன்களை பெறுவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும். ஏற்கனவே, இத்திட்டத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தங்களுக்கென தனியாக, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, கூடுதலாக பெறுவர்.மத்திய அரசின் பிற சுகாதாரத் திட்டங்களில் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள், ஏற்கனவே உள்ள திட்டத்தில் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சுராகோ
செப் 12, 2024 09:02

சமீபத்தில் முதல்வர் அறிவித்தார் ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு சார்பாக விற்கப்படும் என்று. ஆனால் மத்திய அரசு எப்பொழுதோ இருந்து மக்கள் மருந்தகம் என்ற பெயரில் விட்ருகொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன திட்டம் கொண்டுவதலும் இங்கு ஸ்டிக்கர் ஓட்டுவதே வேலையாய் வைத்துகொண்டிருக்கிரார்கள்.


Indhuindian
செப் 12, 2024 07:03

ஏம்ப்பா ஸ்டிக்கர் ரெடியா? சீக்கிரம் சீக்கிரம் மத்திய அமைச்சர் வெளியிலே சொல்றதுக்கு முன்னாடி ஸ்டிக்கர் ஒட்டி போஸ்டர் வைக்கணும் இல்லீன்னா சர்வாதிகாரத்தை வுலகுபடுத்த வேண்டி இருக்கும்


கோவிந்தராசு
செப் 12, 2024 06:42

எந்த மருத்துவ மணையிலும் ஏற்பது இல்ல பெயருக்கு மட்டும். யார் வேணும்னாலும் செக் செய்து பாத்துக்க லாம்


Kumar Kumzi
செப் 12, 2024 08:07

திருட்டு திராவிஷ விடியல் அமூல்படுத்த மாட்டான்


vadivelu
செப் 12, 2024 06:41

எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றாலே உங்களுக்கு இருநூறு வயது என்றாலும் உண்டு என்றுதான் பொருள். மேதாவி என்று நினைப்பா


Balasubramanian
செப் 12, 2024 06:02

இருகரம் கூப்பி வரவேற்கிறோம்


God yes Godyes
செப் 12, 2024 06:01

மோடிஜி யின் நல்ல திட்டங்கள் மற்ற மாநிலங்ஙளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் தமிழ் நாட்டில் மூச், இது


God yes Godyes
செப் 12, 2024 06:01

மோடிஜி யின் நல்ல திட்டங்கள் மற்ற மாமநிலங்ஙளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் தமிழ் நாட்டில் மூச்,


Mani . V
செப் 12, 2024 05:31

வயது வரம்பை 120 என்று உயர்த்தலாம்.


Kasimani Baskaran
செப் 12, 2024 05:15

இது போன்ற ஒரு காப்பீடு அனைவருக்கும் பாதுகாப்புக் கவசம் போன்றது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இது போன்று எத்தனை திட்டங்கள் உருப்படியான அனைவருக்கும் பயன் தரும் விகிதத்தில் இருந்தது என்று கேள்வி கேட்டால் அவன் சங்கி. அதே சமயம் தமிழகத்தை பொறுத்தமட்டில் பொதுமக்களை உணர்ச்சிவசப்படுத்தி ஓட்டை பறிப்பதில் வெகு கவனமாக திராவிடர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள். தமிழனின் வாழ்வு சினிமா, மது, சாப்பாடு போன்றுவற்றயே சுற்றி சுற்றுயே வந்துள்ளது. உழைப்பு, கல்வி, தொழில் என்றிருக்கவேண்டியதை புத்தாக்க சிந்தனைகளை முடக்கி வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளது மாடல் அரசு.


jeyakumar
செப் 12, 2024 04:34

Wonderful திட்டம், நல்லதே நடக்கும், ஆனால் வெகு நாள் ஆகும் மோடி சார்


Ameer Elahi
செப் 12, 2024 20:29

வெகு நாளானாலும் இது சாத்தியமில்லை சும்மா அடிச்சு விட வேண்டியதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை