மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்த சில மணி நேரங்களில் 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்ற கடந்த 10ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூடு
இதில் நிலைதடுமாறிய பஸ், அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் ஒன்பது பேர் பலியாகினர்; 41 பேர் காயமடைந்தனர்.அடுத்ததாக, ஜம்முவின் தோடா மாவட்ட குடியிருப்பு பகுதி, கதுவா மாவட்ட ராணுவ முகாம்களையும் பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார்; இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் நடந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஜம்மு --- காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர். எதிர்ப்பு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், 'பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தினார். காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் தனித்தனியாக பிரதமர் ஆலோசனை நடத்தினார். கூட்டம் நடந்த சில மணி நேரத்தில், பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, 50 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சீனா - பாகிஸ்தானின் சமீபத்திய கூட்டறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட சீனா - பாக்., கூட்டறிக்கையில், ஜம்மு - காஷ்மீர், லடாக் பற்றி தேவையற்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த பிரச்னையில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள்.வேறு எந்த நாட்டிற்கும் இது குறித்து கருத்து தெரிவிக்க உரிமையில்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இடையூறு விளைவித்து, அங்கு பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் மற்ற நாடுகளின் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்; நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago