உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் மரணம் குறித்து விசாரணை?

எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் மரணம் குறித்து விசாரணை?

பெங்களூரு : பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு, 2024 பிப்ரவரி 2ம் தேதி, பெண் ஒருவர், தன் 17 வயது மகளுடன் சென்றார். அப்போது எடியூரப்பா, தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மார்ச் 14ம் தேதி சதாசிவநகர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய சி.ஐ.டி.,யினர், ஏப்ரல் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பினர். அவரும், அன்றைய தினம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மீண்டும் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சி.ஐ.டி., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.அதற்கு எடியூரப்பா, கட்சி நிகழ்ச்சிக்காக டில்லியில் இருப்பதாகவும், ஜூன் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், சி.ஐ.டி.,யோ, ஜூன் 13ம் தேதி, அவரை கைது செய்ய ஜாமினில் வெளி வரமுடியாத பிடிவாரன்ட் பெற்றது.இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அவரை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆக., 30ம் தேதி நடந்த இவ்வழக்கு விசாரணையில், எடியூரப்பாவை கைது செய்ய செப்., 5ம் தேதி வரை தடையை நீட்டித்தது.இந்நிலையில், பெங்களூரில் நேற்று மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி அளித்த பேட்டி:தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது புகார் அளித்த பெண், மே 27ம் தேதி ஹுலிமாவு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தார்.அப்பெண், நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரின் மரணம் குறித்து, அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி திடீரென இறக்க முடியும்? அப்பெண்ணின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன.அப்பெண்ணின் மரணம் குறித்தும், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
செப் 03, 2024 22:33

பருவப்பெண்ணுடன் போனதற்கு காரணம் என்ன ???? உதவி கேட்க போனவர் ஆண்துணையுடன் - கணவர் அல்லது தந்தை அல்லது மகன் - அல்லவா போகவேண்டும் ???? இவர்களில் யாரும் உயிருடன் இல்லை என்றால், பருவப்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு ஒரு நடுத்தர வயதுப்பெண்ணை அழைத்துக்கொண்டு போயிருக்கணும் ....


MADHAVAN
செப் 03, 2024 10:42

மிஸ்ஸுடுகால் மூர்க்னுங்களுக்கு இவ்வ்ளோ திமிரா இருக்கு


Sathyanarayanan Sathyasekaren
செப் 03, 2024 19:36

அட கொத்தடிமை மாதவ, திருட்டு திராவிட கும்பலுக்கு மூளை கம்மி என்பதை நிரூபிக்கிறாய். கர்நாடகாவில் கான் ஸ்கேன் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கிறது,


Ashanmugam
செப் 03, 2024 09:10

இந்த கொடுமைகளுக்கு இந்திய ஜனநாயக நாட்டில் அரபு நாடுகளை போல கடுமையான மரண தண்டணை சட்டம் கிடையாது. ஆதலால் இந்தியாவில் சிறுமி முதல் வயதான மூதாட்டி வரை கற்புக்கும், உடலுக்கும் போதிய பாதுகாப்பு கிடையாது? இறைவன் படைத்த பெண் வாழ்க்கையே சின்னாப்பின்னமாகுகிறது. இதனை காப்பாத்த இந்திய சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.


Shekar
செப் 03, 2024 09:47

அங்கே இருப்பது காங்கிரஸ் அரசுத்தானே, அவர்கள் அரசு மருத்துவமனையில் தானே போஸ்ட்மார்ட்டம் பண்ணுகிறார்கள். இந்த கேஸே நம்பும்படியாக இல்லை


Samy Chinnathambi
செப் 03, 2024 07:05

இந்த சங்கிகள் எப்படி தான் நெஞ்சை நிமிர்த்தி மற்ற கட்சியினரை பேசுகிறார்கள் என்று புரியவில்லை...தமிழ்நாடா ருந்தாலும் , கர்நாடகாவா இருந்தாலும், உ.பியா இருந்தாலும் பா ஜ கட்சி தான் என்பது நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது ..........ithu போக கொலைகள் வேறு ...


Sathyanarayanan Sathyasekaren
செப் 03, 2024 07:26

சாமீ சின்னத்தம்பி, நீ சொன்ன பொய்களுக்கு ஆதாரம் உள்ளதா? திருட்டு திராவிட, கான் காங்கிரஸ் கொத்தடிமைகளுக்கு வாய் திறந்தாள் போய்தான்.. இந்த பெண் இறந்ததற்கு பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக பொய் ?


Sridhar
செப் 03, 2024 16:17

ஒரு செய்தியை வச்சே குற்றம் நிரூபணமான ரேஞ்சுக்கு பேசுறயே, அப்படி பாத்தா திருட்டு திராவிடியா கும்பல்ல ஒரு பய தணடலையிலிருந்து தப்பிக்கமுடியாம போயிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை