உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

நகைகளை பறிப்பது சாத்தியமா? பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வல்சாத்: “பிரதமர் பதவியின் மதிப்பு தெரியாமல் மோடி பேசுகிறார்,” என, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா குற்றஞ்சாட்டி உள்ளார். பா.ஜ.,வின் கோட்டையான குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளுக்கு, மே 7ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வல்சாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:சமீபத்தில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'நீங்கள் அணிந்துள்ள தாலி உள்ளிட்ட நகைகளை பறித்து, முஸ்லிம்களுக்கு காங்கிரசார் கொடுத்து விடுவர்' என பேசியுள்ளார். இதையெல்லாம் கேட்டு உங்களால் சிரிக்கத்தான் முடியும். பதவியின் முக்கியத்துவத்தை உணராமல், நாட்டின் பிரதமர் இதுபோல் பேசி வருகிறார். ஒரு 'எக்ஸ் ரே' இயந்திரத்துடன் உங்கள் வீட்டுக்குள் நுழையும் காங்கிரஸ், உங்கள் ஆபரணங்களையும், பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் தாலி உள்ளிட்ட பொருட்களை பிடுங்கி மற்றவர்களுக்கு வழங்கும் என உங்களை அவர் எச்சரிக்கிறார். இது சாத்தியமா? பா.ஜ., தலைவர்களும், வேட்பாளர்களும் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனரோ, அதை முதலில் மறுப்பர். பின், அதிகாரத்துக்கு வந்தபின் அதை செய்து முடிப்பர். இதுவே பா.ஜ.,வின் தந்திரம். பிரதமராக இருந்த என் பாட்டி இந்திரா, நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார். என் தந்தையும், நாட்டுக்காக உயிரைக் கொடுத்தார். பிரசாரத்துக்கு சென்ற அவரை, பல துண்டுகளாகத் தான் வீட்டுக்கு எடுத்து வந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
ஏப் 28, 2024 11:03

பிரதமர் பதவி மதிப்பு பற்றி தெரியுமா என்று பேசியிருக்கிறார் இவரது அம்மாவைக்கேட்டால் தெரியும் இவர்களால் அந்த நாற்காலியில் வைத்து அழகுபார்க்கப்பட்ட பல பொம்மை மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம், உலகும் கண்டிருக்கிறது, செய்வதெல்லாம் செய்துவிட்டு எப்படித்தான் நா கூசாமல் பேசுவதும், எல்லா தவரையும் செய்துவிட்டு நீதிமன்றத்துக்கும் சென்று வழக்கு தொடுப்பது எல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி செயல்படுவது இந்த முடியாட்சின் தத்துவுவமோ வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஏப் 28, 2024 10:07

இந்திரா காங்கிரஸ் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையையே மாற்றி சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து நீக்கியது வரலாறு. பேத்திக்கு பேத்த மட்டுமே தெரிந்துள்ளது. பாட்டியின் கொடூர மனப்பான்மை மறந்து விட்டது.


ßß
ஏப் 28, 2024 09:46

நீங்க செய்வீங்க என்ன அதற்குண்டான ஆதாரம் இருக்கு யார் பண்ணாங்க உங்க பாட்டி இந்திரா காந்தி


Rajasekar Jayaraman
ஏப் 28, 2024 04:16

திருட்டு கொள்ளையர் கூட்டமான கரும் புல்லி செம்புள்ளி கூட்டம் அதயும் செயும்.


R Kay
ஏப் 28, 2024 02:42

கொள்ளைக்கூட்டத்திற்கு எதுவும் சாத்தியமே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி