உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் தவறுக்கு முதல்வர் பொறுப்பா?

அதிகாரிகள் தவறுக்கு முதல்வர் பொறுப்பா?

பெங்களூரு: ''வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் வங்கி மேலாளர் தவறு செய்துள்ளார். சித்தராமையா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்,''என துணை முதல்வர்சிவகுமார் தெரிவித்தார்.'வால்மீகி வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடியும் வரை, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்' என்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சட்டசபை உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில், நேற்று பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:இந்த ஊழலுக்கும், முதல்வருக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் தவறுசெய்தால், முதல்வர் எப்படி பொறுப்பேற்க முடியும். ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வங்கி அதிகாரி ஒருவர், கடன் வழங்கி உள்ளார். இதற்கு மத்திய நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.சட்டசபை நடவடிக்கைகள் பற்றி எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரிவதில்லை. நாங்கள் பேச அனுமதித்தோம். முதல்வரை பேச அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. இவ் விஷயத்தில் எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது.நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசுஊழலில் ஈடுபடவில்லை. சில அதிகாரிகள் தவறு செய்ததை, அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.நாங்கள் சிறப்புவிசாரணை அமைத்து உள்ளோம். ஒரு பெரிய நிறுவனத்தில், யாரோ ஒரு பணியாளரின் தவறுக்காக, நிறுவனத்தின் தலைவரை குறி வைக்கலாமா.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ