உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி கடலை பொறியா?

முதல்வர் பதவி கடலை பொறியா?

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறாததால், முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவி என கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பெங்களூரில் நேற்று சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா அளித்த பேட்டி:எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஜனநாயகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான அளவுகோல் இது தான்.யாரை முதல்வராக வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் முடிவு, மடாதிபதிகளின் கையில் இல்லை. கேட்பவர்களுக்கு எல்லாம் துாக்கி கொடுக்க, முதல்வர் பதவி என்ன கடலை பொறியா.சட்டசபை தேர்தலில், 135 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தோம். தங்களுக்கு யார் சட்டசபை தலைவராக வரவேண்டும் என்பதை சீட்டில் எழுதினர். அதில், சித்தராமையாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை